2025ஆம் ஆண்டைக் குறித்த அச்சுறுத்தும் கணிப்புகள்: எச்சரிக்கும் வாழும் நாஸ்ட்ரடாமஸ்
2024ஆம் ஆண்டு முடிவடையப்போகிறது. போர், பொருளாதார வீழ்ச்சி என பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்ட மக்கள், 2025 எப்படி இருக்குமோ என்னும் எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.
இந்நிலையில், வாழும் நாஸ்ட்ரடாமஸ் என அழைக்கப்படும் ஏதோஸ் (Athos Salomé) என்னும் பிரேசில் நாட்டவரான ஜோதிடக்கலைஞர், 2025ஆம் ஆண்டைக்குறித்த சில்லிடவைக்கும் சில விடயங்களை கணித்துள்ளார்.
மரபணு மாற்ற மனிதர்கள்
2025ஆம் ஆண்டில், மரபியல் தொடர்பில் பல அறிவியல் ஆய்வுகள் வெளிச்சத்துக்கு வரும் என்று கூறியுள்ளார் ஏதோஸ்.
க்ளோனிங் போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, மரபியல் மாற்றம் மூலமாக, அறிவில் சிறந்த, வலிமையான, நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட, எவ்வித குறைபாடுகளும் இல்லாத மனிதர்களை, அரசாங்கங்களும் நிறுவனங்களும் ரகசியமாக உருவாக்கிக்கொண்டிருப்பதைக் குறித்த உண்மைகளை அறிவியலாளர்கள் இந்த ஆண்டில் வெளிக்கொண்டுவருவார்கள் என்கிறார் அவர்.
கைமீறிப்போகும் செயற்கை நுண்ணறிவு
2025ஆம் ஆண்டில், செயற்கை நுண்ணறிவு, மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறிப்போனதற்கு ஆதாரமாக உலகில் ஒரு நிகழ்வு நடைபெறும் என்கிறார் ஏதோஸ்.
ஏலியன்களுடன் தொடர்பு
2025ஆம் ஆண்டில், ஏலியன்கள் உள்ளன என்பதை அதிகாரப்பூர்வமாக அதிகாரிகள் அறிவிக்கத் தொடங்குவார்கள் என்கிறார் ஏதோஸ்.
அத்துடன், செவ்வாய்க்கிரகத்தில் நுண்ணுயிர்கள் உள்ளன என்பதற்கான ஆதாரங்களையும் அவர்கள் வெளியிடுவார்கள் என்கிறார் ஏதோஸ்.
செயற்கையாக உருவாக்கப்பட்ட ஆற்றல் நெருக்கடி
2025ஆம் ஆண்டில், உலகம் முழுவதும் மனிதர்களால் செயற்கையாக உருவாக்கப்பட்ட ஆற்றல் நெருக்கடி ஏற்படுமென்றும், உலக மக்களைக் கட்டுப்படுத்துவதற்காக அது பயன்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார் ஏதோஸ்.
மனிதர்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள்
மனித உடலில் பொருத்தப்படும் சிப்கள் போன்ற விடயங்களால் மனிதர்களைக் கண்காணிக்கும் நடவடிக்கைகள் சாதாரணமாகிப்போகும் என்கிறார் ஏதோஸ்.
பருவநிலை பேரழிவுகள்
புவி பொறியியலின் காரணமாக, சூறாவளிகள், வறட்சி போன்ற எதிர்பாராத பருவநிலை பேரழிவுகள், எதிர்பாராத இடங்களில் ஏற்படும் என கணித்துள்ளார் ஏதோஸ்.
ரகசிய ராணுவ ஆபரேஷன்கள்
பூமிக்கடியில் ரகசியமாக இயங்கிவரும் ராணுவ தளங்கள், மற்றும் ரகசிய ராணுவ ஆபரேஷன்கள் குறித்த உண்மைகள் 2025ஆம் ஆண்டில் உலகுக்குத் தெரியவரும் என்றும் கூறியுள்ளார் ஏதோஸ்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |