பக்முட் வீழ்ந்தால்…ரஷ்யர்களுக்கான திறந்த பாதையாக இருக்கும்: ஜெலென்ஸ்கி எச்சரிக்கை
உக்ரைன் நகரமான பக்முட் ரஷ்ய படைகளிடம் வீழ்ச்சியடைந்தால் கிழக்கு உக்ரைனுக்கான திறந்த பாதை உருவாகும் என உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கூறியதாக அமெரிக்க ஊடகங்கள் செவ்வாய்க்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன.
ரஷ்ய படைகள் முன்னேற்றம்
உக்ரைனின் கிழக்கு நகரமான பக்முட்டை கைப்பற்றுவதாக ரஷ்ய ராணுவம் உறுதியளித்துள்ளது, அத்துடன் ரஷ்யா அனைத்து விதத்திலும் நகரத்தை கைப்பற்றும் நோக்கில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
பக்முட் நகரை பிடிப்பது உக்ரைனின் ஆயுதப் படைகளின் பாதுகாப்புக் கோடுகளுக்குள் மேலும் தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதிக்கும் என ரஷ்ய பாதுகாப்பு மந்திரி செர்ஜி ஷோய்கு செவ்வாயன்று தெரிவித்துள்ளார்.
திறந்த பாதையாக இருக்கும்
இந்நிலையில் முற்றுகையிடப்பட்டுள்ள பக்முட் நகரை ரஷ்ய ராணுவம் கைப்பற்றினால், அவை கிழக்கு உக்ரைனுக்குள் நுழைய "திறந்த பாதை" இருக்கும் என்று உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
அத்துடன் பக்முட் வெற்றிக்கு பிறகு அவர்கள் மேலும் முன்னேற முடியும் என்று நாங்கள் புரிந்து கொள்கிறோம். அவர்கள் கிராமடோர்ஸ்க்கு செல்லலாம், அவர்கள் ஸ்லோவியன்ஸ்க்கு செல்லலாம், பக்முட்டிற்கு பிறகு உக்ரைனில் உள்ள மற்ற நகரங்களுக்கு டொனெட்ஸ்க் திசையில் ரஷ்யர்களுக்கு இது திறந்த பாதையாக இருக்கும்," என்று தெரிவித்துள்ளார்.
மேலும் "நான் நேற்று தலைமை தளபதி மற்றும் தலைமை இராணுவ தளபதிகளை ஆஃப்லைனில் சந்தித்தேன்... மேலும் அவர்கள் அனைவரும் பக்முட்டில் வலுவாக நிற்க வேண்டும் என்று பேசுகிறார்கள்," என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.