கிரீஸ் படகு விபத்தில் 209 பேர் பலி: பாகிஸ்தான் அரசு வெளியிட்டுள்ள தகவல்
கிரீஸ் படகு விபத்தில் 209 பேர் பலியானதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
கிரேக்கத்தின் தென் பிராந்தியத்திலுள்ள பைலோஸ் பகுதியில் சுமார் 750 பேரை ஏற்றிச் சென்ற மீன்பிடி படகு கடந்த வாரம் விபத்துக்குள்ளானது.
போர் மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து ஐரோப்பாவுக்கு குடிபெயர சட்டவிரோதமாக அகதிகளை ஏற்றிக்கொண்டு லிபியாவிலிருந்து சென்ற படகு கடலில் மூழ்கியது.
இந்த விபத்தில் 209 பாகிஸ்தானியர்கள் பலியானதாக அரசு தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த கொடூரமான சோக சம்பவத்தில் அதிகமான பெண்கள் மற்றும் சிறார்களே காணாமல் போயுள்ளதாக அலுவலகத்தின் பேச்சாளர் ஜெரமி லோரன்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்து தொடர்பாக எகிப்து நாட்டை சேர்ந்த 40 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார், கிரீஸில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |