ஆபத்தில் சிக்கி அந்தரத்தில் தொங்கிய ஆந்தை: கருணையுடன் இளைஞர் செய்த செயல்: வீடியோ
ஆபத்தான நிலையில் வயர் ஒன்றில் சிக்கி கொண்டு தொங்கிய ஆந்தையை இளைஞர் ஒருவர் மீட்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது.
ஆபத்தில் சிக்கி கொண்ட ஆந்தை
சில சமயம் இக்கட்டான நிலையில் விலங்குகள் மற்றும் பறவைகள் சிக்கி கொள்வதையும், அவற்றை சில தூய மனம் படைத்த மனிதர்கள் காப்பாற்றுவதையும் நாம் பார்க்கிறோம்.
அப்படி சமீபத்தில் இணைய வலைதளத்தில் பெரும்பாலானோரால் பார்க்கப்பட்ட வீடியோ ஒன்றில், ஆந்தை ஒன்று வயர் சிக்கி கொண்டு மிகவும் ஆபத்தான நிலையில் தொங்கி கொண்டு இருக்கிறது.
Terrified owl was so thankful to the guy who saved his life pic.twitter.com/UecYjfnIgN
— B&S (@_B___S) June 8, 2023
அப்போது பயந்த ஆந்தையின் அருகில், இளைஞர் ஒருவர் மெதுவாக சென்று வயரில் சிக்கி இருந்த ஆந்தையை விடுவிக்கிறார். இதற்காக வலை போன்ற பையை கொண்டு ஆந்தையை பிடித்து விட்டு, பின் பறவையின் சிறகுகள் சிக்கிய வயரை தீ கங்குகள் கொண்டு எரித்து தூண்டிகிறார்.
இளைஞரின் இந்த மீட்பு செயலின் முழு நேரமும் ஆந்தை மிகவும் பொறுமை காத்து வலையில் அமர்ந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
1 மில்லியன் பார்வையாளர்
இணையத்தில் பரவிய இந்த வீடியோ கிட்டத்தட்ட 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து பார்க்கப்பட்டு வருகிறது.
அதில் ஒருவர் பதிவிட்டுள்ள கமெண்டில், நன்றி உணர்வுக்கு அனைத்து மொழிகளிலும் முகபாவங்கள் ஒன்றுதான் என ஆந்தையை குறிப்பிட்டு பதிவிட்டு இருந்தார்.
The facial expression for thank you is the same in every language
— alienzzzzz (@awoooouwuooooo) June 8, 2023