வெறிச்சோடிய கிராமங்களுக்கு ரூ.92 லட்சம்! இத்தாலியில் புதிய அசாதாரண திட்டம்
உலகம் முழுவதும் பல நாடுகள் பல்வேறு எதிர்பாராத சவால்களை எதிர்கொண்டு வருகின்றன. குறிப்பாக, நகரமயமாக்கல் மற்றும் கிராமப்புற வீழ்ச்சி பல நாடுகளுக்கு மிகப்பெரிய தலைவலியாக மாறியுள்ளது.
இதற்குத் தீர்வுகாண, பல நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஆனால் இத்தாலியில் ஒரு அசாதாரணமான சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நகரமயமாக்கலும் பேய் கிராமங்களும்
நகரங்களில் மக்கள் நெருக்கடியால் திணறுகின்றன. அதே நேரம் கிராமங்களில் மக்கள் நடமாட்டம் குறைந்து, வெறிச்சோடிப் போகின்றன.
வாழ்க்கைத்தரம் உயரவும், வாய்ப்புகளைத் தேடியும் மக்கள் நகரங்களை நோக்கி இடம்பெயர்வதால் கிராமங்கள் காலியாகின்றன.
இப்படி ஆட்கள் இல்லாமல் வெறிச்சோடிப் போன கிராமங்களை 'பேய் கிராமங்கள்' என்று அழைக்கிறார்கள்.
இத்தாலியின் ரூ.92 லட்சம் திட்டம்
இந்தச் சிக்கலைத் தீர்க்க, வடக்கு இத்தாலியில் உள்ள ட்ரென்டினோ மாகாணம் ஒரு கவர்ச்சிகரமான திட்டத்தை அறிவித்துள்ளது.
அதாவது அங்குள்ள ஆல்பைன் பகுதிக்குக் குடிபெயர்வோருக்கு 100,000 யூரோ (சுமார் ரூ.92 லட்சம்) வழங்கத் தயாராக உள்ளது.
இதில் 80,000 யூரோ (சுமார் ரூ.74 லட்சம்) வீட்டைப் புதுப்பிக்கவும், 20,000 யூரோ (சுமார் ரூ.18.5 லட்சம்) புதிய சொத்து வாங்கவும் பயன்படுத்தலாம்.
திட்டத்தின் நிபந்தனைகள்
இந்தத் திட்டம் கவர்ச்சிகரமாக இருந்தாலும், சில நிபந்தனைகள் உள்ளன.
இத்தாலியர்கள் அல்லது வெளிநாட்டில் வசிக்கும் இத்தாலிய வம்சாவளியினர் மட்டுமே இந்தச் சலுகையைப் பெற முடியும்.
அவர்கள் குறைந்தது 10 ஆண்டுகள் அங்கு வசிக்க வேண்டும் அல்லது அந்த இடத்தை 10 ஆண்டுகளுக்கு வாடகைக்கு விட வேண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |