T20 உலகக்கோப்பை - அமெரிக்கா வீரருக்கு விசா வழங்க இந்தியா மறுப்பு
அமெரிக்கா வீரருக்கு T20 உலகக்கோப்பையில் விளையாட இந்தியா வருவதற்காக விசா மறுக்கப்பட்டுள்ளது.
2026 ஐசிசி T20 உலகக்கோப்பை, பிப்ரவரி 7 ஆம் திகதி தொடங்கி மார்ச் 6 ஆம் திகதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது.

20 அணிகள் பங்குபெறும் இந்த தொடரில் முதல் நாள் நடைபெற உள்ள போட்டியில், இந்தியா மற்றும் அமெரிக்கா அணிகள் மோத உள்ளது.
அமெரிக்கா வீரருக்கு இந்திய விசா மறுப்பு
T20 உலகக்கோப்பைக்கான அமெரிக்கா அணி இன்னும் அறிவிக்கப்படாமல் இருந்தாலும், அந்த அணியில் அலி கான் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இந்தியா வருவதற்கான விசா நிராகரிக்கப்பட்டுள்ளதாக அலி கான் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் பிறந்த அலி கான் 15 வயதில் தனது குடும்பத்தினருடன் அமெரிக்காவில் குடியேறிவிட்டார்.
வலது கை வேகப்பந்து வீச்சாளரான அலி கான், இதுவரை 15 ODI மற்றும் 18 T20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
2020 ஐபிஎல் தொடரில் KKR அணியால் வாங்கப்பட்டார்.
இதன் மூலம் ஐபிஎல் தொடரில் பங்குபெற்ற முதல் அமெரிக்கா வீரர் என்ற பெருமையை பெற்றார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |