பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறை! அரசியலில் 5 ஆண்டுகள் தகுதி நீக்கம்
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Toshakhana ஊழல் வழக்கு மற்றும் அரசு பரிசுகளை சட்ட விரோதமாக விற்றதாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
இதுதொடர்பான வழக்கில் இன்று நீதிமன்றம் இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. அத்துடன் அவர் 5 ஆண்டுகள் அரசியலில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் தண்டனை பெற்றால் நவம்பர் தொடக்கத்தில் நடைபெற வேண்டிய தேசிய தேர்தல்களில் இம்ரான்கான் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் முற்றுப்பெறும் என சட்ட வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
இம்ரான் கான் வேண்டுமென்றே பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்திடம் போலியான விவரங்களை சமர்ப்பித்துள்ளார் என நீதிபதி குறிப்பிட்டார்.
AP Photo
பாகிஸ்தான் தொலைக்காட்சி ஒன்றில், 'இம்ரான் கான் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டதாக நீதிபதி ஹுமாயுன் திலாவர் அறிவித்தார்' என தெரிவித்துள்ளது.
மேலும், விசாரணைக்கு இம்ரான் கான் நீதிமன்றத்தில் இல்லை என்பதால் அவரை கைது செய்ய நீதிபதி உத்தரவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |