பின்லேடன் கொல்லப்பட்ட பின்னர் அவரின் மனைவிகளுக்கு என்ன நடந்தது? - வெளியான தகவல்
பின்லேடன் கொல்லப்பட்ட பின்னர் அவரின் மனைவிகளுக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
கொல்லப்பட்ட பின்லேடன்
உலகின் முக்கிய பயங்கரவாத இயக்கமாக செயல்பட்ட அல்கொய்தா அமைப்பின் தலைவராக இருந்தவர் ஒசாமா பின்லேடன்.
2001 ஆம் ஆண்டில், அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலுக்கு இவரே மூளையாக செயல்பட்டார் என கூறப்படுகிறது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்கா கடற்படையின் சீல் பிரிவு கடந்த 2011 ஆம் ஆண்டு மே 2 அன்று பாகிஸ்தானில் அவர் மறைந்திருந்த இடத்தை கண்டுபிடித்து, அங்கு சென்று அவரை கொன்றது.
அவருக்கு 5 மனைவிகள் மற்றும் பல குழந்தைகள் இருந்தது. இதில், 2 மனைவிகளை விவாகரத்து செய்து விட்டார்.
பின்லேடன் கொல்லப்பட்ட பின்னர் அவரின் மனைவிகள் மற்றும் குடும்பத்தினருக்கு என்ன நேர்ந்தது என்ற மர்மம் நிலவி வந்தது.
பின்லேடன் மனைவிகள்
இந்நிலையில், பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரியின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் ஃபர்ஹத்துல்லா பாபர் எழுதிய "The Zardari Presidency: Now It Must Be Told" என்ற புத்தகத்தில் பின்லேடனின் இறப்புக்கு பின்னர் நிகழ்ந்த சம்பவங்கள் குறித்து விவரித்துள்ளார்.
பின்லேடன் கொல்லப்பட்டதையடுத்து, உடனடியாக பாகிஸ்தான் ராணுவம் சம்பவ இடத்திற்கு வந்து அவரது மனைவிகளை காவலில் எடுத்தது.
அதைத்தொடர்ந்து, பாகிஸ்தான் இராணுவத்தின் அபோதாபாத் கன்டோன்மென்ட்டுக்கு வந்த சிஐஏ குழு அவர்களிடம் விசாரணை நடத்தியது.
இந்த சம்பவம், பாகிஸ்தானுக்கு தோல்வியும் அவமானமாகவும் இருந்தது. பின்லேடன், கண்டுபிடிக்கப்பட்டதால் பாகிஸ்தான் எதுவும் செய்ய முடியாத நிலையில் இருந்தது.
அவர் அங்கு மறைந்திருந்ததை அமெரிக்க நிறுவனங்கள் நீண்ட காலமாகவே அறிந்திருந்தன. மேலும், அந்த வளாகத்தை கட்டிய ஒப்பந்தகாரர் யார் என்பதை கூட அறிந்திருந்தனர் என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |