பயங்கரவாத வழக்கில் கைதாகும் இம்ரான் கான்? பரபரப்பாகும் பாகிஸ்தான் அரசியல்
பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைதாவாரா என்ற கேள்வி பரவலாக பேசப்பட்டு வருகிறது
இம்ரான் கான் சிறையில் அடைக்கப்படுவது குறித்து பேசுவது பாகிஸ்தானின் நேரத்தை வீணாக்குவதாகும் என அமைச்சர் கருத்து
இம்ரான் காலை சிறையில் அடைப்பது குறித்து ஆலோசனை நடத்துவது நேரத்தை வீணாக்குவதாகும் என பாகிஸ்தானின் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் மரியம் ஔரங்கசீப் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடந்த வாரம் ஒரு உரையின்போது நீதித்துறை, தேர்தல் ஆணையம் மற்றும் அரசாங்கம் குறித்து பேசிய கருத்துக்கள் கண்டனங்களை தூண்டியது.
அவரது உதவியாளர் ஷாபாஸ் கில் கைது செய்யப்பட்டது குறித்தும், அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த இம்ரான் கான், காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் பெண் நீதிபதி மீது வழக்குப்பதிவு செய்யப்போவதாகவும் தெரிவித்தார்.
Reuters
அதனைத் தொடர்ந்து பொதுக் கூட்டத்தில் நீதிபதி, காவல்துறை அதிகாரிகளை மிரட்டியதாக இம்ரான் கான் மீது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதனால் இம்ரான் கான் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படுவார் என்ற சூழல் உருவானதால், பாகிஸ்தானில் பரபரப்பு நிலவியது. உடனடியாக இஸ்லமாபாத் நீதிமன்றத்தை அணுகிய இம்ரான் கான் 25ஆம் திகதி வரை தன்னை கைது செய்யக்கூடாது என முன் ஜாமீன் வாங்கினார்.
PC: PID
இந்த நிலையில் இதுகுறித்து பேசிய பாகிஸ்தானின் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் மரியம் ஔரங்கசீப்,
'இம்ரான் கானை கைது செய்து சிறையில் அடைப்பது குறித்து விவாதித்து, நேரத்தை வீணடிப்பதில் பாகிஸ்தான் அரசு சிறுதும் அக்கறை காட்டவில்லை' என தெரிவித்துள்ளார்.