காவல் தலைமை அலுவலக வளாகத்தில் திடீரென நுழைந்த பயங்கரவாதிகள்! சரமாரி தாக்குதலில் நடந்த உயிரிழப்புகள்..உச்சகட்ட பரபரப்பு
பாகிஸ்தானில் கராச்சி காவல் அலுவலகத்தை தாக்கிய ஐந்து பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
திடீர் தாக்குதல்
காரச்சி நகரில் உள்ள நகர காவல் துறையின் தலைமை அலுவலக வளாகத்திற்குள், நேற்று முன்தினம் திடீரென வெடிகுண்டு ஆயுதங்களுடன் பயங்கரவாதிகள் நுழைந்தனர்.
கையெறி குண்டுகளை சரமாரியாக வீசிய அவர்கள், அலுவலகத்தின் 3வது மற்றும் 4வது மாடியினுள் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதில் 2 காவலர்கள், துணை ராணுவப்படை வீரர், சுகாதாரப் பணியாளர் ஒருவர் என 4 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 14 பேர் காயமடைந்தனர்.
பயங்கரவாதிகள் பலி
எனினும், காவல் படையினர் மற்றும் பாதுகாப்பு படையினர் அங்கே முற்றுகையிட்டு பதில் தாக்குதல் நடத்தியதில் 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களில் இருவர் உடலில் கட்டிவந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கராச்சி நகரில் 144 தடை உத்தரவு பிறக்கப்பிக்கப்பட்டுள்ளது.
Reuters