பப்ஜியால் நேர்ந்த சோகம் - குடும்பத்தினரை கொன்ற சிறுவனுக்கு 100 ஆண்டு சிறை
பப்ஜி விளையாட்டால் குடும்பத்தை கொன்ற சிறுவனுக்கு 100 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பப்ஜியால் நிகழ்ந்த கொலை
பாகிஸ்தானின் லாகூர் அருகே உள்ள ஜயின் அலி என்ற 14 வயது சிறுவன் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.
ஒவ்வொரு நாளும் பல மணி நேரத்தை, PUBG என்னும் ஆன்லைன் விளையாட்டில், ஜயின் அலி கழித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக, 45 வயதான தாய் நஹீத் முபாரக், சிறுவனை அடிக்கடி கண்டித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டு சம்பவத்தினத்தன்று, ஜயின் அலி பல மணி நேரம் பப்ஜி விளையாடி, அதில் தோல்வியடைந்து மிகுந்த ஆக்ரோஷத்தில் இருந்தார். அப்போது அவரது தாய் வழக்கம் போல கண்டித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து அன்று இரவில், தூங்கி கொண்டிருந்த தாயின் துப்பாக்கியை எடுத்து, அவரது தாய், 20 வயதான சகோதரர் தைமூர், 15 வயது சகோதரி மஹ்னூர் மற்றும் 10 வயது சகோதரி ஜன்னத் ஆகிய 4 பேரையும் சுட்டுகொன்றுள்ளார்.
100 ஆண்டு சிறை
இதனையடுத்து, காவல்துறையினர் சிறுவன் ஜயின் அலியை கைது செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த லாகூர் நீதிமன்றம், 12.61 லட்சம் அபராதம் மற்றும் ஒரு கொலைக்கு 25 ஆண்டுகள் வீதம், 4 கொலைக்கு 100 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்துள்ளது.
"ஆன்லைன் விளையாட்டு காரணமாக தனது குடும்பத்தையே கொலை செய்துள்ளார். குற்றவாளி சிறுவன் என்பதால், மரண தண்டனைக்கு பதிலாக சிறைத்தண்டனை வழங்கப்படுகிறது" என கூடுதல் அமர்வு நீதிபதி ரியாஸ் அகமது தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |