பாகிஸ்தானில் இலங்கையரை காப்பாற்ற முயன்ற நபருக்கு கிடைக்க போகும் கவுரவம்! இம்ரான்கான் அறிவிப்பு
பாகிஸ்தானில் இலங்கையரை காப்பாற்றம் முயன்ற நபரை, அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் பாராட்டியுள்ளார்.
பாகிஸ்தானின் Sialkot நகரில் உள்ள தனியார் தொழிற்சாலையில், மேலாளராக பணியாற்றி வந்த இலங்கையின் கொழும்புவைச் சேர்ந்த Priyantha diyawadana என்பவர் அங்கிருக்கும் சக ஊழியர்களால் கொடூரமாக எரித்து கொலை செய்யப்பட்டார்.
இவரை அந்த ஊழியர்களிடம் இருந்து நபர் ஒருவர் காப்பாற்ற முயற்சிக்கும் புதிய வீடியோ ஒன்று நேற்று வெளியாகி இணையத்தில் வைரலானது. அவரின் இந்த செயலை பலரும் பாராட்டினர்.
On behalf of the nation I want to salute moral courage & bravery of Malik Adnan who tried his utmost to shelter & save Priyantha Diyawadana from the vigilante mob in Sialkot incl endangering his own life by physically trying to shield victim. We will award him Tamgha i Shujaat
— Imran Khan (@ImranKhanPTI) December 5, 2021
இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் சற்று முன்பு தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், Sialkot-ல் நடந்த சம்பவத்தின் போது, அவரை காப்பாற்ற முயன்ற Malik Adnan-வின் இந்த தார்மீக செயல் மற்றும் துணிச்சலை பாராட்டுகிறேன்.
தேசத்தின் சார்பாக சல்யூட் அடிக்க விரும்புகிறேன் என்று குறிப்பிட்டு, அவருக்கு நாட்டின் உயரிய விருதான Tamgha i Shujaat விருது வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து Malik Adnan அங்கிருக்கும் உள்ளூ ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில், நான் கடந்த 16 ஆண்டுகளாக குறித்த தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறேன். உயிரிழந்த இலங்கையர் Priyantha diyawadana ஏழு ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார்.
தனக்கு விருது அறிவித்த பிரதமர் இம்ரான்கானுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். நான் செய்த இந்த செயலின் மூலம் மற்றவர்களும், இது போன்ற யாரேனும் பாதிப்பில் உள்ள போது, உதவ ஊக்குவிக்கும் என்று நம்புகிறேன்.
இதுபோன்ற பயங்கரவாத சம்பவங்கள் நிறுத்தப்பட வேண்டும், சட்டத்தை கையில் எடுக்க யாருக்கும் உரிமை இல்லை என்று அவர் கூறினார். மேலும், அன்றைய தினம் Priyantha diyawadana தாக்கப்படுவதாக எனக்கு தகவல் கிடைத்தது.
உடனடியாக நான் அலுவலகத்தை விட்டு வெளியில் சென்று காப்பாற்ற முயன்றேன். ஆனால், ஏராளமான மக்கள் கூடியதால், காப்பாற்ற முடியவில்லை என்று வேதனையுடன் கூறினார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திருமதி பஞ்சாட்சரதேவி அருமைத்துரை
சரவணை, யாழ்ப்பாணம், ஹல்துமுல்ல, London, United Kingdom
18 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி ருக்குமணி வரதராசா
சுழிபுரம் மேற்கு, லியோன், France, Bobigny, France, London, United Kingdom, அமெரிக்கா, United States
20 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் முருகேசு இராமலிங்கம்
புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, Holstebro, Denmark
19 May, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் வல்லிபுரம் கனகசபாபதி
கரவெட்டி கிழக்கு, தெற்கிலுப்பைகுளம், Greenford, United Kingdom
21 May, 2018
மரண அறிவித்தல்
திருமதி கமலாதேவி கோபாலகிருஷ்ணன்
பருத்தித்துறை, London, United Kingdom, Nigeria, Toronto, Canada
14 May, 2022