பாகிஸ்தான் கேபிள் கார் விபத்து: 15 மணி நேரத்திற்கு பிறகு சிறுவர்கள் உட்பட 8 மீட்பு
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கிற்கு மேல் அறுந்து தொங்கிய கேபிள் காரில் சிக்கி இருந்த 8 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் சிக்கிய கேபிள் கார்
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள பள்ளத்தாக்கில் சிறுவர்கள் உட்பட 8 பேர் சென்ற கேபிள் கார் ஒன்று திடீரென விபத்தில் சிக்கியது.
கேபிள் திடீரென அருந்ததால் சுமார் 900 அடி உயரத்தில் சிறுவர்கள் உட்பட 8 பேர் குழுவுடன் கேபிள் காரானது அந்தரத்தில் தொங்கியது.
Watch the moment crowd welcomes final children rescued from dangling cable car in Pakistan
— Sky News (@SkyNews) August 22, 2023
Read more: https://t.co/oOqm7ppBHV pic.twitter.com/24EiySTZoh
இதனிடையே இந்த விபத்தில் சிக்கிய அனைவரும் 10 முதல் 15 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றே தகவல் வெளியாகி இருந்தது.
இந்த விபத்து குறித்து அறிந்த பாகிஸ்தானின் தற்காலிக பிரதமர் உடனடியாக மீட்பு நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார், அதனடிப்படையில் பொலிஸார், ராணுவ அதிகாரிகள் போன்றவர்கள் மீட்பு பணியில் தீவிரமாக களமிறங்கினர்.
Image: ViralPress
8 பேரும் பத்திரமாக மீட்பு
இந்நிலையில் கேபிள் காரில் 900 அடி உயரத்தில் 15 மணி நேரத்திற்கும் மேலாக தொங்கிய 8 பேரையும் பாதுகாப்பாக மீட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதில் 11 முதல் 15 வயதுடைய 7 சிறுவர்களும் அவர்களுடைய ஆசிரியர் ஒருவரும் மீட்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
Rescue 1122 Hazara
இரண்டு சிறுவர்கள் ஹெலிகாப்டரின் உதவியுடன் பகல் பொழுதில் மீட்கப்பட்டு விட்டதாகவும், மீதமுள்ள 6 பேர் பெரும் சிரமத்திற்கு நடுவிழும் விடாமல் இரவு நேரத்தில் பத்திரமாக மீட்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |