பாகிஸ்தானில் தேவாலயங்கள் மீது தாக்குதல்; 129 பேர் கைது
பாகிஸ்தானில் தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் 129 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் பைசலாபாத் மாவட்டத்தில் உள்ள ஜரன்வாலா பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் வீடுகள் மீது மத நிந்தனை குற்றச்சாட்டின் பேரில் கும்பல் தாக்குதல் நடத்தியதில் 129 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுமார் 600 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பஞ்சாப் காவல்துறை தெரிவித்துள்ளது.
இரண்டு கிறிஸ்தவர்கள் மத நூல்களை அவமதித்ததாக குற்றம் சாட்டியதை அடுத்து புதன்கிழமை வெடித்த வன்முறையின் போது ஐந்து மசூதிகள் ஒரு கும்பலால் சேதப்படுத்தப்பட்டன.
அப்பகுதியில் உள்ள கிறிஸ்தவ காலனியில் உள்ள தேவாலயங்கள் மற்றும் வீடுகளில் இருந்த மரச்சாமான்கள் மற்றும் இதர பொருட்கள் எரிக்கப்பட்டன.
தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ள போதிலும், மோதல் ஏற்படக் கூடும் என்பதால் அவதானம் பேணப்பட்டு வருகின்றது. பைசலாபாத் மாவட்டத்தில் ஏழு நாட்களுக்கு மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். Pakistan Churches, Pakistan |