பாகிஸ்தானில் கடுமையான உணவுப் பஞ்சம்: மாவு வாங்கும் போது கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தானில் கடுமையான உணவுப் பஞ்சத்தினால் இலவசமாக மாவு வழங்கப்பட்ட போது கூட்ட நெரிசலில் சிக்கி இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
கடுமையான உணவுப் பஞ்சம்
பாகிஸ்தான் நாட்டில் பொருளாதார நெருக்கடியின் காரணமாக மக்கள் தங்களது அடிப்படைத் தேவையை பெறுவதே மிகவும் கஷ்டமான விஷயமாக இருக்கிறது.
@afp
இந்த நிலையில் ராணுவ அதிகாரிகளுக்கு உணவில்லாத பற்றாக்குறை ஏற்பட்டது. பெட்ரோல், டீசல் மற்றும் எரிபொருள்களின் விலை உயர்வாலும், மருந்துகளின் பற்றாக்குறையாலும் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.
@afp
தற்போது உண்டாகியுள்ள பொருளாதார நெருக்கடியால் மக்களுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சமையலுக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்கு கூட விலை உயர்வால் யோசிக்க வேண்டியதாக இருக்கிறது.
கூட்ட நெரிசலில் உயிரிழப்பு
பாகிஸ்தான் அரசு ராணுவ லோரிகள் மூலம் கொண்டுவரப்படும் சமையலுக்குத் தேவையான கோதுமை மாவுப் பொருளை மக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது. இந்த நிலையில் முசப்பார்கராக் ஜடோய் என்ற பகுதியில் இலவச மாவுப் பொருள் வாங்க வந்த பெண் கூட்ட நெரிசலில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
@afp
பின்னர் அந்த மூதாட்டியின் பெயர் ஜாக்ரா மாய் என தெரிய வந்துள்ளது. இரண்டாவது சம்பவமாக முகமது சப்தர் என்பவர் நான்கு பையில் மாவுப் பொருட்களை இலவச விநியோகம் செய்பவர்களிடமிருந்து வாங்கிக் கொண்டு மோட்டார் பைக்கில் செல்கையில் விபத்துக்குள்ளாகி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
கோதுமைக்குத் தட்டுப்பாடு
பாகிஸ்தானில் மக்களது அன்றாட உணவில் கோதுமை தான் பிரதான பங்கு வகுக்கிறது. தற்போதைய நிலவரப்படி அந்நாட்டில் ஒரு மூட்டை கோதுமை விலை 3000 ரூபாய் ஆகும்.அதுவும் அந்த கோதுமையை வாங்க தெருக்களில் மக்கள் சண்டை போட வேண்டிய சூழல் உள்ளது.
இதனைக் கருத்தில் கொண்டு உணவு தட்டுப்பாடை குறைக்க இந்த திட்டத்தை முன்னெடுத்தாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
@twitter
இலவசமாக கோதுமை மாவு வழங்குவதால் அடிப்படை உணவு பிரச்சனை தீர வாய்ப்புள்ளது என தான் இவ்வாறு வழங்கி வருவதாகத் தெரிகிறது.
மேலும் வரும் நாட்களில் கோதுமை கூட சேமிப்பில் இல்லை என்பதால் கடுமையான உணவு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது.