தலையில் துப்பாக்கி குண்டு கவசம்..!நீதிமன்றத்தில் ஆஜரான முன்னாள் பிரதமர் இம்ரான் கான்: வீடியோ
துப்பாக்கி குண்டு தடுப்பு கவசங்களுடன் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் லாகூர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
இம்ரான் கான் கைது உத்தரவு
இஸ்லாமாபாத் நீதிமன்றத்தை சேர்ந்த பெண் நீதிபதியை மிரட்டிய வழக்கில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பிணையில் வர முடியாத கைது பிடியாணை-யை இஸ்லாமாபாத் செஷன்ஸ் நீதிமன்றம் பிறப்பித்தது.
இதையடுத்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கைது செய்வதற்கு அவரது வீட்டை சுற்றி காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.
The assault on my house today was first of all a contempt of court. We had agreed that an SP with one of our people would implement a search warrant bec we knew otherwise they would plant stuff on their own, which they did. Under what law did they break the gate, pull down trees pic.twitter.com/110uTeIlce
— Imran Khan (@ImranKhanPTI) March 18, 2023
ஆனால் இம்ரான் கைது குறித்து அறிந்த அவரது ஆதரவாளர்கள், அவரது வீடு அமைந்துள்ள ஜமான் பூங்கா அருகே குவிந்தனர். இதையடுத்து இம்ரான் கான் ஆதரவாளர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு மிகப்பெரிய கலவரம் வெடித்தது.
நீதிமன்றத்தில் ஆஜர்
இந்நிலையில் கடந்த மாதம் தன்னுடைய ஆதரவாளர்களுக்கும், பொலிஸாருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான வழக்கில் இடைக்கால ஜாமீனை நீட்டிக்க கோரி முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பாகிஸ்தான் லாகூர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
Ex Paxtan PM Imran Khan brought to anti-terrorism court in Lahore with bullet proof shield covers.
— Major Surendra Poonia (@MajorPoonia) April 4, 2023
See a bullet proof bucket ? on top of Imran’s head !
How Pakis will save their nuclear arsenal from terrorists ?? pic.twitter.com/Y00orHzVsY
அப்போது, துப்பாக்கி குண்டு கவசங்களால் தன்னை மறைத்து கொண்டு மிகுந்த பாதுகாப்புடன் நீதிமன்ற வளாகத்திற்குள் உள் நுழைந்தார்.
மேலும் இம்ரான் கான் அவரது தலையில் அணிந்து இருந்த துப்பாக்கி குண்டு கவச வாலி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.