எனது ஆடைகளை விற்றாவது..! பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உறுதிமொழி
எனது ஆடைகளை விற்றாவது பாகிஸ்தானில் அதிகரிக்கும் கோதுமையின் விலையை கட்டுப்படுத்துவேன் என அந்த நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் ரஷ்யா இடையேலான போர் மற்றும் உலகளவில் அதிகரிக்கும் பருவநிலை மாற்றம் போன்ற காரணங்களால் பல்வேறு நாடுகள் உணவு தானிய தட்டுப்பாடு மற்றும் அத்தியாவசிய பொருள்களின் விலையேற்றம் ஆகிய நெருக்கடியை சந்தித்து வருகின்றன.
அந்தவகையில் கடும் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கி பெரும் போராட்டங்கள் கண்ட இலங்கை நாட்டை தொடர்ந்து பாகிஸ்தானும் மிகப் பெரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது.
இதனால் பாகிஸ்தானில் உள்ள கைபர் பாக்துன்குவா மாகாணத்தில் பொருளாதார நெருக்கடி காரணமாக கோதுமை விலை உயர்த்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில், இந்த விலையேற்றத்திற்கு கடுமையான கண்டனம் தெரிவித்த அந்த நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், இதுத் தொடர்பாக பொதுகூட்டம் ஒன்றில் பேசிய போது, எனது உயிரை கொடுத்தாவது இந்த நாட்டை வளர்ச்சி மற்றும் செழிப்பான பாதைக்கு அழைத்து செல்வேன் என உறுதி அளித்துள்ளார்.
அத்துடன் கைபர் பாக்துன்குவா மாகாணத்தின் முதலமைச்சர் மம்முத் கான் 24 மணி நேரத்திற்குள் கோதுமை விலையேற்றத்தை 400 ரூபாய்க்குள் கொண்டு வர வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் நான் எனது ஆடைகளை விற்றாவது குறைந்த விலைக்கு நாட்டிற்கு கோதுமையை கொண்டு வருவேன் எனத் தெரிவித்தார்.
மேலும் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பாகிஸ்தானில் பணவிக்கம் அதிகரிக்கும், வேலைவாய்ப்பு தட்டுப்பாடு ஏற்படும் என்று பயமுறுத்தி வருகிறார், ஆனால் அவரோ உலக அளவில் எரிபொருளின் விலை அதிகரித்து கொண்டு இருக்கும் போது, தனது பதவி பறிபோகிவிடும் என்ற பயத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட ஏரிபொருள்களின் விலையை குறைத்தார்.
கூடுதல் செய்திகளுக்கு: உக்ரைனில் வணிகவளாகம் ஒன்றில் கண்டெடுக்கப்பட்ட அப்பாவி மக்களின் சடலங்கள்
இதனால் அவர் நாட்டின் பொருளாதாரத்தை இக்கட்டான நிலைக்கு மட்டுமே தள்ளியுள்ளார் என குற்றம் சாட்டினார்.