பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது துப்பாக்கிச் சூடு! வெளியான வீடியோ காட்சி
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பி.டி.ஐ கட்சியின் தலைவருமான இம்ரான் கான் மீது சற்று முன் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசுக்கு எதிராக இஸ்லாமாபாத்தை நோக்கி இம்ரான் கான் பேரணி மேற்கொண்டு வந்தநிலையில் இன்று வஜிராபாத் வந்தார்.
அவருடன் ஆயிரக்கணக்கில் தொண்டர்கள் பேரணியில் பங்கேற்று வந்தநிலையிலே இச்சம்பவம் அறங்கேறியுள்ளது.
This guy has saved Imran Khan.
— Haris Khan (@haarriisssssss) November 3, 2022
Can’t thank him enough. pic.twitter.com/IZISiVJbmn
இந்த பேரணி இம்ரான் கான் தனது பிரச்சார வாகனத்தின் உச்சியில் இருந்தபோது அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அவரது வலது காலில் குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டது.
அதுமட்டுமின்றி அவருடன் பி.டி.ஐ கட்சியைச் சேர்ந்த முன்னணி தலைவர்களான ஃபைசல் ஜாவெத், அகமது சத்தா உள்பட 4 பேருக்கு குண்டு காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவி்க்கப்பட்டுள்ளது.
Footage of the firing. Assassination attempt on Imran Khan. pic.twitter.com/fmSgI2E8jc
— Ihtisham Ul Haq (@iihtishamm) November 3, 2022
இதன் பின்னர் இம்ரான் கான் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இம்ரான் கான் மீதான இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் பாகிஸ்தானில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இச்சம்பவம் குறித்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்தாகும்.
Footage from the container when Imran Khan shot on his leg. pic.twitter.com/rE3CyMoTdP
— Ihtisham Ul Haq (@iihtishamm) November 3, 2022