பாகிஸ்தானுக்கு Hangor நீர்முழ்கி கப்பல்களை வழங்கும் சீனா., ரிஸ்க் எடுக்கும் மற்றொரு ஆசிய நாடு
சீனா பாகிஸ்தானுக்கு 8 ஹாங்கோர் (Hangor) வகை நீர்மூழ்கி கப்பல்களை வழங்க ஒப்பந்தம் செய்துள்ளது.
இதில் மூன்றாவது கப்பல் சமீபத்தில் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டது.
இந்த நீர்மூழ்கி கப்பல்கள் stealth திறன், நீருக்கு அடியில் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கும் திறன் மற்றும் சக்திவாய்ந்த போர் திறன்களைக் கொண்டவை என சீனா வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், 4 கப்பல்கள் சீனாவில் கட்டப்படும், மீதமுள்ள 4 கப்பல்கள் பாகிஸ்தானின் கராச்சி கப்பல் தொழிற்சாலையில் கட்டப்படவுள்ளன.
ஆனால், இந்த திட்டத்தில் பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. முக்கியமாக போர் கட்டுப்பட்டு அமைப்பில் (Combat management System) தொழில்நுட்ப சிக்கல்கள் ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து, ஜேர்மனியின் Rolls Royce நிறுவனம் அதன் MTU396 எஞ்சின்களை வழங்க மறுத்தது. இதனால், சீனாவின் CHD 620 எஞ்சின்கள் மாற்றாக பயன்படுத்தப்படுகின்றன.
இந்த ஹாங்கோர் வகை கப்பல்கள் இந்தியாவின் நவீன நீர்மூழ்கி கப்பல்களுடன் ஒப்பிடுகையில், சில குறைபாடுகள் உள்ளன. சீனாவின் ஆயுதங்கள் இந்தியாவின் Operation Sindoor-ல் தோல்வியடைந்ததைக் கருத்தில்கொல்லாமல், பாகிஸ்தான் மீண்டும் ஆபத்தான முடிவுகளை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதேபோல், ஜேர்மன் எஞ்சின் கிடைக்காத பட்சத்தில் சீனா அதன் CHD 620 எஞ்சின்களைக் கொண்டு உருவாக்கப்படும் S26T Yuvan வகை நீர்மூழ்கி கப்பலை வாங்க தாய்லந்து மறுப்பு தெரிவித்திருந்தது. ஆனால், சமீபத்தில் அதனை ஏற்க ஒப்புதல் அளித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Hangor-class submarine, Pakistan Navy submarines, China Pakistan defense deal, Submarine technology transfer, Pakistan vs India navy, Chinese military exports, Thailand submarine deal, Rolls-Royce MTU396 engines, Chinese stealth submarine