45,000ஐத் தாண்டிய பலி எண்ணிக்கை! ஆயிரக்கணக்கான உடல்கள் புதைந்திருக்கலாம் என சந்தேகம்
இஸ்ரேல், ஹமாஸ் இடையிலான போரில் பலியானவர்களின் எண்ணிக்கை 45 ஆயிரத்தைத் தாண்டியதாக பாலஸ்தீனம் கூறியுள்ளது.
நீடிக்கும் போர்
கடந்த 14 மாதங்களாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நீடித்து வருகின்றது. இதில் 17,000க்கும் மேற்பட்ட ஹமாஸ் போராளிகளை கொன்றுவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் கூறியது.
இந்நிலையில் காஸா முனையில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை பாலஸ்தீன சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 45,000ஐத் தாண்டியதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
பலி எண்ணிக்கை
அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என கூறப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் எத்தனை பேர், ஹமாஸ் அமைப்பினர் எத்தனை பேர் என்று விளக்கமாக சுகாதாரத்துறை கூறவில்லை.
மேலும் 106,962 பேர் காயமடைந்ததாகவும், இடிபாடுகளுக்கு அடியில் அல்லது மருத்துவ ஊழியர்கள் செல்ல முடியாத பகுதிகளில், ஆயிரக்கணக்கான உடல்கள் இன்னும் புதையுண்டிருப்பதால், உண்மையான பலி எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், காஸாவில் 23 லட்சம் மக்கள் இருந்த நிலையில், போரில் 2 சதவீதம் பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |