கனடா செல்ல காத்திருந்த இளைஞர்... தலை துண்டிக்கப்பட்டு சடலமாக மீட்பு: அம்பலமான பகீர் பின்னணி
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தன்பால் ஈர்ப்பாளர்கள் என்பதால் சுமார் 90 பாலஸ்தீனிய இளைஞர்கள் இஸ்ரேலிடம் அடைக்கலம் கோரி காத்திருப்பு
பாலஸ்தீனிய இளைஞர் கடத்தப்பட்டு தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில் அதிர்ச்சி பின்னணி வெளியாகியுள்ளது.
குறித்த படுகொலை தொடர்பில் சந்தேக நபரை கைது செய்துள்ளதாக பாலஸ்தீனிய பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர். தன்பாலின ஈர்ப்பாளரான 25 வயது அஹ்மத் அபு மர்ஹியா என்பவரே கடத்தப்பட்டு, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவர் தன்பாலின ஈர்ப்பாளர் என்பதாலையே, படுகொலை செய்யப்பட்டதாக சமூக ஊடகங்களில் வெளியான கருத்துகளுக்கு பொலிஸ் தரப்பில் விளக்கமளிக்கபடவில்லை.
ஹெப்ரான் பகுதியில் அக்டோபர் 5ம் திகதி தலை துண்டிக்கப்பட்ட நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. இதனிடையே, கடந்த இரண்டு ஆண்டுகளாக அஹ்மத் அபு மர்ஹியா இஸ்ரேலில் குடியிருந்து வருவதாகவும், தஞ்சம் கோரி இஸ்ரேல் நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், இஸ்ரேல் குடிமகனாக கனடாவில் வாழ அஹ்மத் அபு மர்ஹியா திட்டமிட்டுள்ளதும் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மட்டுமின்றி, அவர் தன்பாலின ஈர்ப்பாளர் என்பதால் இஸ்ரேலில் இருந்தே அவருக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
Credit: Wikimedia Commons.
ஆனால், பாலஸ்தீனிய நகரமான ஹெப்ரானில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டதன் பின்னணி இதுவரை மர்மமாகவே உள்ளது. அஹ்மத் அபு மர்ஹியா கடத்தப்பட்டிருக்கலாம் என அவரது நண்பர்கள் சிலர் கூறுகின்றனர்.
ஆனால் ஹெப்ரான் பகுதியில் அவர் அடிக்கடி சென்று வருவது வழக்கம் எனவும், வேலை நிமித்தம் சென்ற அவரை தாக்கி கொலை செய்திருக்கலாம் எனவும் குடும்பத்தினர் கூறுகின்றனர்.
தற்போது இந்த விவகாரத்தில் சந்த்யேக நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பாலஸ்தீனிய பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இதனிடையே, தன்பால் ஈர்ப்பாளர்கள் என அடையாளம் காணப்பட்டதால் சுமார் 90 பாலஸ்தீனிய இளைஞர்கள் இஸ்ரேலிடம் அடைக்கலம் கோரி காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.