பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட நிலச்சரிவு - 100இற்கும் மேற்பட்டோர் பலி
வடக்கு பப்புவா நியூ கினியாவின் கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 100 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கினியாவில் ஏற்பட்ட நிலச்சரிவு
அதிகாலை 3 மணியளவில் ஏற்பட்ட மண்சரிவில் உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன.
நாட்டின் தலைநகரான போர்ட் மோர்ஸ்பிக்கு (Port Moresby) வடமேற்கே சுமார் 600 கிலோமீட்டர் தொலைவில் உள்ள எங்க மாகாணத்தில் உள்ள காகலம் (Kaokalam) கிராமத்தில் இந்த நிகழ்வு நிகழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இறப்பு எண்ணிக்கையை மொத்தமாக அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை என்றாலும் தற்போதைய நிலவரப்படி 00இற்குகு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என்று கிராமவாசிகள் கூறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Source: AAP / Ninga Role/PR Image
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |