பராகுவே நாட்டின் வேளாண் அதிகாரி பதவி நீக்கம்: நடந்தது என்ன?
பராகுவே நாட்டில் நித்தியானந்தாவின் கைலாசாவுடன் ஒப்பந்தம் செய்ததால் வேளாண் துறையின் தலைமை அதிகாரியின் பதவி பறிபோனது.
நித்தியானந்தா, கைலாசா எனும் புதிய நாட்டை உருவாக்கி, அதற்கென தனிக்கொடி, பாஸ்போர்ட், நாணயம் இருப்பதாகவும் அறிவித்தார்.
மேலும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள், பிற நாடுகளை சேர்ந்தவர்கள் இங்கு வந்து குடியேறலாம் எனவும் அவர் கூறியது பரபரப்பானது.
இந்நிலையில் கைலாசாவுடன், கடந்த அக்டோபர் மாதம் பராகுவேயின் வேளாண் துறை சார்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதுதொடர்பான செய்திகள் பராகுவே பத்திரிகைகளில் செய்தியாகவும் வெளியானது. இதனைத் தொடர்ந்து வேளாண் துறை தலைமை அதிகாரி அர்னால்டோ சாமோரா சர்ச்சையில் சிக்கினார்.
இந்த நிலையில் இது பராகுவே பாராளுமன்றத்திலும் பூதாகரமாக வெடித்தது. அதன் பின்னர் அர்னால்டோ சாமோரா நேற்று பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், 'கைலாசா நாட்டை சேர்ந்த 2 பிரதிநிதிகள் என்னை சந்தித்தனர். எங்கள் நாட்டுக்கு உதவி செய்வதாக உறுதி அளித்தனர். பல்வேறு திட்டங்களை அவர்கள் முன் வைத்தனர். அவர்களை நம்பி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டேன்' என தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |