ஒரே ஒரு பை... பல மணி நேரம் மொத்தமாக ஸ்தம்பித்த விமான நிலையம்
ஸ்வீடனின் அர்லாண்டா விமான நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான பையால் ஒரு முனையத்தில் உள்ள பயணிகள் மொத்தமும் வெளியேற்றும் நிலை ஏற்பட்டது.
கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட அந்த பை தொடர்பில் தெளிவான தகவல் ஏதும் இல்லாத நிலையில், சுமார் 3 மணி நேரம் அர்லாண்டா விமான நிலையத்தின் குறித்த முனையம் ஸ்தம்பித்த நிலையில் காணப்பட்டது.
இதனால் விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. விமான நிலையம் முழுவதும் பரபரப்பும் அச்சமும் காணப்பட்டதும்.
இந்த நிலையில், சுமார் 11.30 மணியளவில், பொலிசார், குறித்த பையால் அச்சுறுத்தல் இல்லை என்பதை உறுதி செய்தனர்.
மட்டுமின்றி, தங்களின் சமூக ஊடக பக்கத்திலும் அந்த தகவலை பதிவேற்றம் செய்தனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அர்லாண்டா விமான நிலையத்தின் அனைத்து போக்கு வரவும், இந்த ஒரே முனையம் வழியாகவே முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
சுமார் 3 மணி நேரம் விமானங்கள் புறப்பட தாமதமானதை அடுத்து, உரிய விமான சேவை நிறுவனங்களிடம் தொடர்பு கொள்ள பயணிகள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.