17 பெண் குழந்தைகளுக்கு சிந்தூர் என பெயர் சூட்டிய பெற்றோர்கள் - எந்த மாநிலத்தில் தெரியுமா?
ஆபரேஷன் சிந்தூரை பெருமைப்படுத்தும் வகையில், 17 பெண் குழந்தைகளுக்கு சிந்தூர் என பெற்றோர்கள் பெயர் சூட்டியுள்ளனர்.
ஆபரேஷன் சிந்தூர்
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 26 பேர் கொல்லப்பட்டனர்.
பஹல்காம் தாக்குதலுக்கு, பதிலடி கொடுக்கும் வகையில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில், பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் நேற்று தாக்கியழித்துள்ளது.
பதிலுக்கு, பாகிஸ்தானும் இந்திய பகுதிகளில் தாக்குதலில் ஈடுபட்டது. இதன் காரணமாக இரு நாடுகளுக்குமிடையே போர் மூளும் சூழல் ஏற்பட்டது.
இந்நிலையில், மே 10 ஆம் திகதி இரு நாடுகளும் போர் நிறுத்தம் செய்ய ஒப்புக்கொண்டதாக அமெரிக்கா அதிபர் டொனால்ட் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். இதன் பின்னர் இரு நாடுகளும் போர் நிறுத்தம் செய்தனர்.
சிந்தூர் என்பது ஹிந்தியில் சிவப்பு நிற பொட்டை குறிக்கும். ஹிந்து மதப்படி கணவரை இழந்த பெண்கள் நெற்றியில் பொட்டு வைத்து கொள்ள மாட்டார்கள்.
பஹல்காம் தாக்குதலில் 26 ஆண்கள் கொல்லப்பட்டு, அவரது மனைவிகள் பொட்டை இழந்ததால் இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
17 குழந்தைகளுக்கு பெயர்
இதன் எதிரொலியாக பீகாரின் மகேஷ்பூர் கிராமத்தில் வசிக்கும் குந்தன் குமார் மற்றும் சிம்பிள் தேவி தம்பதி அன்று பிறந்த தங்களின் பெண் குழந்தைக்கு ‘சிந்தூரி’ என பெயர் வைத்தனர்.
இந்நிலையில், மே 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் உத்தரபிரதேசத்தில் பிறந்த 17 பெண் குழந்தைகளுக்கு `சிந்தூர்’ என குடும்பத்தினர் பெயரிட்டுள்ளதாக மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் ஆர்.கே.ஷாஹி தெரிவித்துள்ளார்.
சிந்தூர் என்பது வெறும் வார்த்தையல்ல. அது ஓர் உணர்ச்சி. எனவே எங்கள் மகளுக்கு சிந்தூர் என்று பெயரிட முடிவு செய்துள்ளோம்.
எங்கள் மகள் பிறப்பதற்கு முன்பே என் கணவரும் நானும் அந்தப் பெயரைப் பற்றி யோசித்தோம். இந்த வார்த்தை எங்களுக்கு ஓர் உத்வேகம் அளிக்கிறது. இதை கவுரமாக கருதுகிறோம்" என குஷிநகரைச் சேர்ந்த பெண் குழந்தையின் தாய் அர்ச்சனா ஷாஹி தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |