இறந்த மகனுக்கு மீண்டும் உயிர்! சடலத்தை உப்புக் குவியலில் வைத்த பெற்றோர்.. 8 மணி நேரம் கழித்து நடந்தது என்ன?
உயிரிழந்த மகனுக்கு மீண்டும் உயிர் கொடுக்க பெற்றோர் செய்த வினோத செயல்.
அதிகாரிகள் நிலைமையை உணர வைத்த நிலையில் தகனம் செய்யப்பட்ட சடலம்.
இந்தியாவில் உயிரிழந்த 10 வயது மகன் மீண்டும் உயிர்பெற்று எழுவான் என நம்பி 8 மணி நேரம் உப்புக் குவியலில் சடலத்தை பெற்றோர் வைத்திருந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
நவீன தொழில்நுட்பத்தில் உலகம் இரட்டிப்பு வேகத்தில் முன்னேறி வருகிறது. இருப்பினும், சில இடங்களில், பண்டைய மூடநம்பிக்கைகள் மற்றும் பழக்கவழக்கங்கள் இன்னும் நிலவுகின்றன.
அப்படியொரு சம்பவம் தான் கர்நாடக மாநிலத்தின் பெல்லாரி மாவட்டத்தில் நடந்துள்ளது. சுரேஷ் என்ற 10 வயது சிறுவன் குட்டையில் குளித்த போது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளான்.
சிறுவனின் சடலத்தை மீட்டுக் கொண்டு வரும் போது, சடலத்தை உப்புக் குவியலில் வைத்தால் சிறுவன் உயிர்பெற்றுத் திரும்பி வருவான் என்று ஒருவர் கூறியுள்ளார். ஏனெனில் தண்ணீரில் மூழ்கி இறந்தவர்களை உப்புக்குள் வைத்தால் அவர்கள் மீண்டும் உயிர் பெறுவார்கள் என நம்பினர்.
tv9telugu
இதையடுத்து தன்னுடைய மகன் திரும்ப உயிர் பெற்று விடுவான் என்ற நம்பிக்கையில் பெற்றோர் நூறு கிலோவுக்கு மேல் உப்பை கொண்டு வந்தனர். பின்னர் சுரேஷின் சடலத்தை முழுவதுமாக மூடி, தலை மட்டும் வெளியே தெரியும்படி வைத்துள்ளனர்.
ஒரு மணிநேரம், இரண்டு மணிநேரம் என நேரம் கடந்ததே தவிர, மகன் உயிர்த்தெழுந்த பாடில்லை. சுமார் எட்டு மணி நேரம் இப்படியே வைத்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பெற்றோரிடம் பேசினார்.
பின்னர் சிறுவன் உயிர் பிழைக்கமாட்டான் என்பதை அவர்கள் உணர்ந்த நிலையில் உடல் தகனம் செய்யப்பட்டது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.