ஒரு பைசா கூட வாங்காமல்., ரூ.118 கோடி செலவிட்டு 1200 பேரை பட்டதாரியாக்கிய வேட்பாளர்
கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 1200 பேரை ஒரு பைசா செலவில்லாமல் பாரிவேந்தர் எம்பி படிக்க வைத்து பட்டதாரிகளாக மாற்றி இருக்கிறார்.
கடந்த 2019 -ம் ஆண்டு மக்களவை தேர்தலில் போட்டியிட்ட பெரம்பலூர் வேட்பாளர் பாரிவேந்தர், ஆண்டுக்கு 300 பேரை ஒரு பைசா செலவில்லாமல் பட்டதாரியாக்குவேன் என்று வாக்குறுதி கொடுத்தார்.
அப்போது அவரை இதையெல்லாம் எப்படி செய்வார் என்ற பல்வேறு கேள்விகள் எழுந்தது. ஆனால், ஏழை குழந்தைகளை தேர்ந்தெடுத்து அவர்களின் கல்விக் கனவை நிறைவேற்றியதுடன், தேர்தல் சமயத்தில் அளித்த வாக்குறுதியையும் பாரிவேந்தர் எம்.பி நிறைவேற்றியுள்ளார்.
தற்போது இரண்டாவது முறையாக பெரம்பலூர் தொகுதியில் பாரிவேந்தர் போட்டியிடுகிறார். இவரை பற்றி சொல்ல வேண்டுமென்றால் தனது நிறுவனத்திலிருந்து கோடிக் கணக்கான ரூபாயை தொகுதிக்காக செலவு செய்துள்ளார்.
1200 மாணவர்கள்
இவர் பெரம்பலூர் தொகுதி ஏழை மக்களின் குழந்தைகளை பைசா செலவில்லாமல் படிக்க வைப்பேன் என்று கூறிய வாக்குறுதியை நூறு சதவீதம் நிறைவேற்றியுள்ளார்.
அதாவது ஆண்டுக்கு 300 மாணவர்கள் வீதம் கடந்த 4 வருடங்களில் 1200 மாணவர்களை பைசா வாங்காமல் உயர்கல்வி படிக்க வைத்து பட்டம் பெற வைத்துள்ளார்.
இதற்காக, இவரது எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் ரூ.118 கோடிக்கு மேல் செலவு செய்துள்ளது. கல்விக்கட்டணத்தை வாங்காமல் பாட புத்தங்களை இலவசமாக வழங்கியது முதல் உணவு, இருப்பிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தது என்று 1200 மாணவர்களுக்கும் இவ்வளவு தொகை செலவிடப்பட்டுள்ளது.
B.Tech, B.E., Agri, Art and Science என பல்வேறு உயர்கல்வி படிப்புகள் பயில உதவி செய்துள்ளார். இவர்களில் சிலர் வேலைக்கு சென்று சம்பாதிக்கவே ஆரம்பித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |