இந்திய நாடாளுமன்ற விவாதம் தெருச்சண்டை போல இருக்க கூடாது.., ஓம்பிர்லா விமர்சனம்
நாடாளுமன்ற விவாதம் தெருச்சண்டை போல இருக்க கூடாது என்று மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா கருத்து தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தல் முடிந்து புதிய நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பல்வேறு பிரச்சனைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெறுகிறது.
ஓம்பிர்லா பேசியது
இந்நிலையில் மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா தனது சொந்த தொகுதியான ராஜஸ்தான் மாநிலம் கோட்டவுக்கு சென்றார்.
அங்கு அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "நாடாளுமன்றத்தில் சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது ஜனநாயகம் செழிப்பாக இருப்பதை காட்டுகிறது. இந்த விடயம் வரவேற்கப்படக்கூடியது.
மேலும், சிறைக்கைதிகளாக இருக்கும் அம்ரித்பால் சிங், ரஷீத் ஆகியோர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். இவர்கள் நீதிமன்றத்தின் மூலம் பதவிப்பிரமாணம் எடுத்துள்ளனர்.
அதோடு, மக்களவையில் எதிர்க்கட்சிகள் பலமாக இருப்பது மக்களின் குரலை பிரதிபலிப்பதற்கு கிடைத்த நல்ல வாய்ப்பு. மக்களவையில் ஒவ்வொரு உறுப்பினரின் கருத்துக்களையும் தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்படும்.
நாடாளுமன்ற விவாதம் தெருச்சண்டை போல் இருக்கக்கூடாது. அங்கு நடைபெறும் விவாதத்துக்கும், தெருக்களில் நடக்கும் விவாதத்துக்கும் வித்தியாசத்தை மக்கள் எதிர்பார்க்கிறார்கள்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |