பயங்கரவாதிகள் இருக்கும் தனிச்சிறையில் முன்னாள் பிரதமர் இம்ரான்கான்: உயிரிழக்க வைக்க சதி என குற்றச்சாட்டு
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை, பயங்கரவாதிகள் இருக்கும் தனிச்சிறையில் அடைத்து வைத்து சதி செய்வதாக அவரது கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இம்ரான் கான்
ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளால், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2023ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட அவர், ராவல்பிண்டியில் உள்ள அடிலா சிறையில் உள்ளார்.
இந்நிலையில், இம்ரான் கானின் தெக்ரிக்-இ-இன்சப் கட்சி தங்கள் கட்சித் தலைவர் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளது.
சதித்திட்டம்
இதுதொடர்பாக தெக்ரிக்-இ-இன்சப் கட்சி கூறுகையில், "இம்ரான் கான் பயங்கரவாதிகளை அடைத்து வைக்கும் தனிமைச்சிறையில் அவர் அடைத்து வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழக்க வைக்க சதித்திட்டம் தீட்டப்படுகிறது.
சிறையில் உள்ள அவரை 6 பேர் சந்திக்கலாம் என நீதிமன்றம் அனுமதி அளித்தது. ஆனாலும், அவரை சந்திக்க சிறை அதிகாரிகள் அனுமதி மறுக்கின்றனர். மேலும், இம்ரான் கானை சந்திக்க அவரது மனைவி புஷ்ரா பீபிக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளனர்.
2018ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டுவரை இம்ரான் கான் பாகிஸ்தானின் பிரதமராக இருந்தார். எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தினால் பிரதமர் பதவியை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |