நெதர்லாந்தில் தடம் புரண்ட பயணிகள் ரயில்:ஒருவர் பலி! டஜன் கணக்கானோர் படுகாயம்
நெதர்லாந்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டதில் ஒருவர் பலியாகி இருப்பதாகவும், 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் விபத்து
செவ்வாய்க்கிழமை அதிகாலை நெதர்லாந்தில் குறைந்தது 50 பேர்களை ஏற்றிக் கொண்டு சென்ற பயணிகள் ரயில் தடம் புரண்டதில் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார், மேலும் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லைடன் நகரில் இருந்து ஹேக் நோக்கி சென்ற பயணிகள் ரயில், பாதையில் இருந்த கட்டுமான உபகரணத்தை தாக்கியதில் தடம் புரண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Twitter
இந்த விபத்தில் காயமடைந்தவர்களில் பலர் தீவிரமான நிலையில் இருப்பதாகவும், சிலருக்கு சம்பவ இடத்திலேயே சிகிச்சை பெற்று வருவதாகவும் அவசர சேவைகள் தெரிவித்துள்ளன.
விபத்தின் போது ரயில் வண்டியில் முன் பெட்டி தடம் புரண்டு வயலில் உருண்டதாகவும், அதன் பின் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் பின்னர் அது அணைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரயில் போக்குவரத்து நிறுத்தம்
விபத்து காரணமாக லைடன் மற்றும் ஹேக் பகுதிகளுக்கு இடையிலான ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாக டச்சு ரயில்வே ட்வீட் ஒன்றில் தெரிவித்துள்ளது.
மேலும் விபத்து நடந்த இடத்தில் மீட்பு குழுக்கள் தி ஹேக்கிற்கு அருகிலுள்ள வூர்சோடென் என்ற கிராமத்தில் இருந்ததாக அவசர சேவைகள் தெரிவித்தன.