மரணத்தில் இருந்து நூலிழையில் தப்பிய விமானப் பயணிகள்: திகைப்படைய வைத்த இழப்பீடு
நியூசிலாந்தின் ஆக்லாந்துக்கு புறப்பட்டு சென்ற விமானம் ஒன்று திடீரென்று கோளாறில் சிக்க, அதில் பயணித்த 50 பேர்கள் ரத்த காயங்களுடன் தப்பிய நிலையில், அவர்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீடு மொத்த பேர்களையும் கொந்தளிக்க வைத்துள்ளது.
அனைவருக்கும் சிற்றுண்டி
மரணத்தை ஏமாற்றி உயிர் தப்பிய Latam Airlines பயணிகள் அனைவருக்கும் சிற்றுண்டி அளித்து அந்த சம்பவத்தை முடித்துக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிட்னியில் இருந்து ஆக்லாந்து நகருக்கு புறப்பட்ட Latam Airlines விமானம் திடீரென்று நடுவானில் கோளாறில் சிக்கியுள்ளது. அந்த விமானமானது ஒருகட்டத்தில் தலைகீழாக வானில் இருந்து தரையில் பாய்ந்துள்ளது.
இதில் பல பயணிகள் இருக்கையில் இருந்து தூக்கி வீசப்பட்டனர். விமானிகளின் கடும் முயற்சிக்கு பின்னர், அந்த விமானம் ஆக்லாந்து சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
இதில் 13 பயணிகள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எஞிசியவர்களுக்கு விமான நிலையத்திலேயே உரிய சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அடுத்து என்ன என்பது குறித்து அறிந்துகொள்ள காத்திருந்த எஞ்சிய பயணிகளுக்கு தலா ஒரே ஒரு cheeseburger மட்டுமே உணவாக அளிக்கப்பட்டுள்ளது.
நிர்வாகம் நடந்துகொண்ட விதம்
திங்களன்று மதியத்திற்கு மேல் நடந்த இச்சம்பவத்தை அடுத்து, செவ்வாய்க்கிழமை பகல் வரையில் அவர்களுக்கு உணவளிக்கவில்லை என்றே கூறப்படுகிறது. விபத்து ஏற்படுவதை தடுக்க முடியாது ஆனால், Latam Airlines நிர்வாகம் நடந்துகொண்ட விதம் ஏற்றுக்கொள்வதாக இல்லை என்றும் பயணி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, செவ்வாய்க்கிழமை விடிகாலை 2 மணிக்கு பயணிகள் அனைவரையும் ஆக்லாந்து ஹொட்டலுக்கு அனுப்பி வைத்துள்ளனர். அந்த cheeseburger சாப்பிட்ட பின்னர் அங்கே அவர்கள் பகல் உணவு சாப்பிட்டுள்ளனர்.
இதனிடையே, Latam Airlines நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், காயமடைந்தவர்கள் பிரேசில், பிரான்ஸ், அவுஸ்திரேலியா, சிலி மற்றும் நியூசிலாந்தைச் சேர்ந்த பயணிகள் என குறிப்பிட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |