வெளிநாட்டில் உங்கள் பாஸ்போர்ட்(Passport) தொலைந்துவிட்டால் என்ன செய்வது?
பாஸ்போர்ட்(Passport) என்பது மிக முக்கியமானதும், அவசியமான ஒன்றும் என்பது நம் அனைவருக்குமே தெரியும்.
பாஸ்போர்ட் இருந்தால் மட்டுமே வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள முடியும்.
ஒருவேளை பாஸ்போர்ட் தொலைந்துவிட்டால் என்ன செய்வது என்று யோசித்ததுண்டா?
உள்நாட்டை விடுங்க, வெளிநாட்டில் இருக்கும் போது பாஸ்போர்ட் தொலைந்துவிட்டால் என்ன செய்வது?
எங்கிருந்தாலும் சரி நீங்கள் முதலில் செய்ய வேண்டியது காவல்நிலையத்தில் புகார் அளிப்பது தான்.
புகார் அளித்த மனுவின் நகலை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள், இதனால் உங்களது பாஸ்போர்ட்டை மற்றவர்கள் தவறாக பயன்படுத்த முடியாது.
காவல் நிலையத்தில் புகார் அளித்த மனுவின் நகலுடன் உங்கள் நாட்டின் தூதரகத்தை அணுகிவிடுங்கள்.
பாஸ்போர்ட் தொலைந்த போது நடந்த விடயங்கள் குறித்து கட்டாயம் தெரிவிக்க வேண்டும், பின்னர் தொலைந்து போன/சேதமடைந்த பாஸ்போர்ட் பிரிவின் கீழ் “மறு வெளியீடு” என் பிரிவை தேர்வு செய்யவும்.
தொடர்ந்து புதிய பாஸ்போர்ட் வழங்குவதற்கான கோரிக்கையை சமர்பிக்கவும், இதன் பின்னர் வேறு எண் கொண்ட பாஸ்போர்ட்டை பெறுவீர்கள்.
ஏற்கனவே பாஸ்போர்ட் பெறும் போது என்னென்ற ஆவணங்கள் கொடுத்தீர்களோ அதற்கான நகல்கள் கேட்கப்படும், இதற்கு சிறிது காலம் எடுக்கலாம்.
ஒருவேளை அவரசமாக நாட்டை விட்டு வெளியேற விரும்பினால், மாற்று பாஸ்போர்ட் அல்லது அவரச சான்றிதழுக்கு விண்ணப்பிக்கலாம்.
இதற்கு,
விசாவின் நகல்
பாஸ்போர்ட் பக்கங்களின் முன்/பின் நகல்
ஓட்டுநர் உரிமம் போன்ற அடையாள சான்று
விமான டிக்கெட்
குடியுரிமைக்கான சான்று
காவல் நிலையத்தில் புகார் அளித்த மனுவின் நகல்
இவ்வாறு வாங்கப்படும் அவசர சான்றிதழ் குறிப்பிட்ட காலம் மட்டுமே செல்லுபடியாகும், அதற்குள் குறித்த நாட்டை விட்டு வந்துவிடவேண்டும்.
உங்கள் நாட்டுக்கு வந்தபின்னர், மாற்று பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளுங்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |