ரஷ்ய படைகளிடமிருந்து தங்கள் கிராமத்தை மீட்ட உக்ரைன் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பளித்த மக்கள்: மனதை மகிழவைக்கும் ஒரு வீடியோ
ரஷ்ய படைகள் கைப்பற்றிய உக்ரைன் கிராமங்களை மீட்ட உக்ரைன் வீரர்களுக்கு, மக்கள் உற்சாக வரவேற்பளிப்பதைக் காட்டும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
ரஷ்ய படைகள் கைப்பற்றிய உக்ரைன் கிராமங்கள் சிலவற்றை உக்ரைன் வீரர்கள் மீட்டுள்ளார்கள். நேற்று Irpin நகரமும், Kyivக்கு அருகில் உள்ள Hostomel விமான தளமும் உக்ரைன் வீரர்களால் மீட்கப்பட்டன.
அத்துடன், செர்னோபில் அணுமின் நிலையம் அமைந்துள்ள பகுதியையும் மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளன உக்ரைன் படைகள்.
இந்நிலையில், பல வாரங்களாக ரஷ்யப் படையினர் வசம் சிக்கியிருந்த கிராமம் ஒன்றை மீட்ட உக்ரைன் வீரர்கள் அந்த கிராமம் வழியாக அணிவகுத்துச் செல்ல, அங்கு வரிசையில் காத்திருந்த அக்கிராம மக்கள், நாங்கள் உங்களுக்காக காத்திருந்தோம் தெரியுமா என்று கூறி, அவர்களுக்கு இனிப்புகள் வழங்கி, அவர்களை உற்சாகத்துடன் வரவேற்பதைக் காட்டும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
உற்சாகக் குரல் எழுப்பியவண்ணம் அவர்கள் தங்கள் நாட்டு வீரர்களை ஹீரோக்கள் போல வரவேற்பதை அந்த வீடியோவில் காணலாம்.
அந்த மக்கள் முகத்தில் காணப்படும் மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது, அப்படி கொண்டாடுகிறார்கள் அவர்கள் தங்கள் வீரர்களை!
[OYIO9R ]