ஆசிய நாடொன்றில் மன்னராட்சி வேண்டுமென போராட்டத்தில் இறங்கிய மக்கள்! வெடித்த வன்முறை
நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சி வேண்டும் என அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதிருப்தியடைந்த மக்கள்
இந்தியாவில் இருந்து பிரிந்து தனிநாடாக மாறிய நேபாளத்தில் 2008ஆம் ஆண்டு மக்களாட்சி உருவானது.
அதனைத் தொடர்ந்து இன்றுவரை 13 அரசாங்கங்கள் மாறிவிட்டன. ஆனாலும், அங்கு நிலையான அரசு அமையாததால் பொருளாதாரம் கடுமையான பதிப்பில் உள்ளது.
இதன் காரணமாக அதிருப்தியடைந்த மக்கள், கடந்த சில நாட்களாக நேபாளத்தில் மன்னராட்சியை கொண்டுவர வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடைசியாக மன்னராக இருந்த ஞானேந்திரா ஷாவின் (77) ஆட்சியை மீண்டும் கொண்டுவர வேண்டும் என அவரது ஆதரவாளர்களும், தலைநகர் காத்மாண்டுவில் போராட்டத்தில் இறங்கியபோது வன்முறை வெடித்தது.
பதற்றமான சூழல்
அரசியல் கட்சியின் அலுவலகம், கடைகளை அடித்து நொறுக்கிய போராட்டக்காரர்கள் வாகனங்களுக்கும் தீ வைத்ததால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.
நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதுவரை வன்முறையில் இருவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து தற்போது இராணுவம் களமிறங்கியுள்ளது.
மேலும் காத்மண்டு உட்பட பல்வேறு இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |