கொரோனாவுக்கு இடையே மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த நாடு... சுற்றுலா தலங்கள் மூடல்
வரலாறு காணாத சுட்டெரிக்கும் வெயிலால் கிரேக்கத்தில் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கிரேக்கத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக வெப்ப அலை வீசி வருவதால், பொதுமக்கள் எவரும் வெளியே செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ள பட்டுள்ளனர்.
வயதான மற்றும் வீடற்றவர்களுக்காக அரசாங்கம் சார்பில் குளிரூட்டப்பட்ட அறைகளையும் நகரின் பல பகுதிகளில் திறந்துள்ளனர்.
கடந்த 10 நாட்களாக வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் அதிகபட்சமாக ஒரே நாளில் 43C வெப்பநிலை பதிவாகியுள்ளது. மட்டுமின்றி கிரேக்கத்தின் மிகவும் பிரபலமான சுற்றுலா தலமான Acropolis மூடப்பட்டுள்ளது.
நாளுக்கு பல ஆயிரம் மக்கள் குவியும் பகுதி என்பதால் எச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். கிரேக்கத்தில் 2007 மற்றும் 2000 ஆண்டுகளில் கடும் வெப்ப அலை வீசியுள்ளது.
இந்த இரு ஆண்டுகளிலும் வரலாறு காணாத வகையில் வெப்பம் பதிவாகியுள்ளது. இதற்கு முன்னர் ஜூலை 1987 ல், கிரேக்க வரலாற்றில் மிக மோசமான வெப்ப அலைகளைத் தொடர்ந்து 1,500 பேர் இறந்தனர்.
கொரோனா பேரிடரில் இருந்து படிப்படியாக மீண்டு வரும் கிரேக்கம் சமீபத்தில் மட்டுமே சுற்றுலா தலங்களை திறக்க முடிவு செய்தது.
மட்டுமின்றி கிரேக்கம் இன்னும் இங்கிலாந்தின் அம்பர் பட்டியலில் உள்ளது, அதாவது இங்கு வருகை தரும் எவரும் திரும்பி இங்கிலாந்து சென்றபின் 10 நாட்களுக்கு தனிமைப்படுத்த வேண்டும்.