49 கிலோ உடல் எடைக்கு குறைவான எவரும் வெளியே செல்ல வேண்டாம்: சீனா வெளியிட்ட வித்தியாசமான எச்சரிக்கை
இந்த வார இறுதியில் சீனாவில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், 49 கிலோவுக்கும் குறைவான எடையுள்ளவர்கள் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு சீன அரசு ஊடகங்கள் வலியுறுத்தியுள்ளன.
49 கிலோவுக்கும் குறைவான
வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை வடக்கு சீனாவை சூறாவளி போன்ற பலத்த காற்று தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் முக்கிய விளையாட்டு நிகழ்வுகளை ஒத்திவைத்தல், பூங்காக்களை மூடுதல், டசின் கணக்கான ரயில் சேவைகளை நிறுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை சீன நிர்வாகம் முன்னெடுத்துள்ளது.
அத்துடன் பிராந்தியத்தின் 22 மில்லியன் குடியிருப்பாளர்களையும் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்க எச்சரித்துள்ளனர். மேலும், காற்றின் வேகம் காரணமாக 49 கிலோவுக்கும் குறைவான எடையுள்ளவை எளிதில் அடித்துச் செல்லப்படலாம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில், 49 கிலோவுக்கும் குறைவான உடல் எடை கொண்டவர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை சமூக ஊடகங்களில் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
வடக்கு சீன மாகாணங்களில் மணிக்கு 93 மைல் வேகத்தில் மங்கோலியாவில் இருந்து காற்று வீசக்கூடும் என்பதால் டசின் கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
வருடத்தின் ஏப்ரல் மாதங்களில் மங்கோலியாவிலிருந்து மணல் மற்றும் தூசியை சுமந்து வரும் பலத்த காற்று சாதாரணமானது. ஆனால் காலநிலை மாற்றம் வானிலை நிகழ்வுகளை மிகவும் தீவிரமாக்கியுள்ளது.
அவசரநிலை மேலாண்மை
இதனிடையே, கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறையாக சீன நிர்வாகம் இந்த வார இறுதியில் ஆரஞ்சு புயல் எச்சரிக்கையை வெளியிட்டது, இது நான்கு அடுக்குகளில் இரண்டாவது அதிகபட்சமாகும். சனிக்கிழமை தலைநகரில் வெப்பநிலை 12 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் காற்றின் வேகம் 1951 ஆம் ஆண்டு ஏப்ரல் மாத சாதனைகளை விட அதிகமாகவோ அல்லது அந்த அளவுக்கோ இருக்கலாம் என்று வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்த நிலையில், சீனப் பகுதியான இன்னர் மங்கோலியா மற்றும் வடகிழக்கு சீனாவின் சில பகுதிகளை கடும் பனி மூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில் தெற்கு சீனா இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான ஆலங்கட்டி மழையால் பாதிக்கப்படக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை தலைநகருக்குச் செல்லும் அல்லது புறப்படும் 56 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன, சனிக்கிழமை 103 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
இதனிடையே, அவசரநிலை மேலாண்மை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், 2025 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் சீனாவில் ஏற்பட்ட இயற்கை பேரழிவுகள் காரணமாக 1.27 பில்லியன் டொலர் நேரடி பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |