ஆத்திரத்தில் புடின்., பெற்றோரின் கல்லறை மீது அசிங்கம் செய்த நபர்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் பெற்றோரின் கல்லறை இழிவுபடுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் (St Petersburg) உள்ள செராஃபிமோவ்ஸ்கி கல்லறையில் (Serafimovsky cemetery) உள்ள ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் பெற்றோரின் கல்லறையில், பெயர் தெரியாத நபர் ஒருவர் சிறுநீர் கழித்துள்ளார்.
இந்த செய்தி ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு எட்டியது, சனிக்கிழமை அதிகாலையில், புடின் செரிஃபிமோவ்ஸ்கி கல்லறை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கத்தினார்.
சிறுநீர் கழித்த நபரால் எடுக்கப்பட்ட காணொளி, சிறிது நேரத்தில் வைரலானது.
An unknown person urinated on the grave of Putin's parents at the Serafimovsky cemetery in St. Petersburg. pic.twitter.com/zF63kbLUB7
— Insider Corner (@insiderscorner) March 15, 2024
இருப்பினும் அந்த காணொளியில் நம்பகத்தன்மை குறித்து இன்னும் சந்தேகம் இருப்பதாக கூறப்படுகிறது.
சிறுநீருக்கு பதிலாக வேறு ஏதேனும் திரவம் பயன்படுத்தப்பட்டதா என்பது இன்னும் தெரியவில்லை.
ரஷ்ய ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது. இதற்கு மத்தியில் இப்படியொரு சம்பவம் நடந்துள்ளது.
ரஷ்யாவிற்கு சாத்தியமான எதிர்க்கட்சி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இல்லாத காரணத்தால், விளாடிமிர் புதின் இன்னும் 6 ஆண்டுகளுக்கு ரஷ்யாவின் ஜனாதிபதியாக நீடிக்க உள்ளார்.
மறுபுறம், ஜனாதிபதி தேர்தலின் போது ரஷ்யாவின் சில பகுதிகளில்மக்கள் தங்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்தனர்.
மக்கள் சைபீரியாவில் வாக்குச்சாவடிகளை தீயிட்டு எரிக்கும் காணொளி வெளியானது.
ரஷ்யாவின் தேர்தலின் முதல் நாளில் நாடு முழுவதும் வாக்காளர்களின் எதிர்ப்புகள் மற்றும் நாசவேலைகள் பற்றிய பரவலான அறிக்கைகளுக்கு மத்தியில் விளாடிமிர் புடின் ஆத்திரமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
அதில் முக்கிய காரணம் செரிஃபிமோவ்ஸ்கி கல்லறையில் நடந்த சம்பவம். இதுகுறித்து விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ரஷ்யாவில் மூன்று நாள் தேர்தல் நேற்று இரவு தொடங்கி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி வரை நடைபெறும்.
