73வது பிறந்தநாளில் விளாடிமிர் புடின் ஓய்வெடுப்பாரா? பெஸ்கோவ் கூறிய பதில்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் 73வது பிறந்தநாளில் ஓய்வெடுப்பாரா என்ற கேள்விக்கு டிமிட்ரி பெஸ்கோவ் பதிலளித்தார்.
விடுமுறை எடுக்கவில்லை
கடந்த 2022ஆம் ஆண்டில், உக்ரைன் மீது படையெடுப்பை ரஷ்யா தொடங்கியதில் இருந்து ஜனாதிபதி விளாடிமிர் புடின் விடுமுறை எடுக்கவில்லை.
கடைசியாக அவர் 2021யில் அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்குவுடன் சைபீரியாவுக்கு இரண்டு முறை பொதுவிடுமுறை பயணம் செய்தார்.
இந்த நிலையில், புடின் அரசு முறைப்பயணமாக அக்டோபர் 9ஆம் திகதி எமோமாலி ரஹ்மானுடன் தஜிகிஸ்தான் செல்ல உள்ளார்.
இதற்கிடையில், அரசின் TASS செய்தி நிறுவனத்திடம் புடின் விடுமுறை குறித்து செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கொவ் பேசியுள்ளார்.
குறைவாக தூங்கினார்
அவரிடம் அக்டோபர் 7ஆம் திகதி தனது 73வது பிறந்தநாளில் ஜனாதிபதி ஓய்வெடுக்க திட்டமிட்டுள்ளாரா என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், "இல்லை, அவரால் விடுமுறை எடுக்க முடியாது. உண்மையைச் சொன்னால் சில நேரங்களில் அவர் இவ்வளவு பலத்தைக் கண்டறிவது எனக்குப் புரியவில்லை" என்றார்.
மேலும் அவர், "அவர் (புடின்) எப்போதும் செறிவின் உச்சத்தில் இருப்பார். மிகைப்படுத்தாமல், ஒரு நாளைக்கு சில மணிநேரங்கள் மட்டுமே தூங்கிறார். எனக்கும் அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. புடின் முன்பு வழக்கமாக ஒரு இரவில் 6 மணிநேரம் மற்றும் சில நேரங்களில் குறைவாக தூங்கினார்" என்றும் தெரிவித்தார்.
ஜனாதிபதி புடின் எப்போதாவது பொதுமக்களின் பார்வையில் இருந்து மறைந்துவிடுகிறார். குறிப்பாக, 2024ஆம் ஆண்டு நவம்பரில் மேற்கு நாடுகளுடன் அதிகரித்த பதட்டங்களின்போது, கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு அவர் பொது நிகழ்வுகளில் காணப்படவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |