ரஷ்யாவின் ஊடக ஒடுக்குமுறையை நியாயப்படுத்தும் புடினின் செய்தித்தொடர்பாளர்: அவர் கூறும் காரணம்
ஊடகங்களின் முக்கியமான தகவல்களை அடக்குவது நாட்டிற்கு எதிரான தகவல் போரின் சகாப்தம் என ரஷ்ய செய்தித் தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோ தெரிவித்துள்ளார்.
ஊடகங்கள் மீது ஒடுக்குமுறை
உக்ரைன் மீதான முழு அளவிலான படையெடுப்பை தொடங்கியதில் இருந்து, ரஷ்ய அதிகாரிகள் ஊடகங்கள் மீது முன்னோடியில்லாத ஒடுக்குமுறையை விதித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனை ஜனாதிபதி விளாடிமிர் புடினின் செய்தித் தொடர்பாளரான டிமித்ரி பெஸ்கொவ் (Dmitry Peskov) தற்போது ஒப்புக்கொண்டுள்ளார்.
ஆனால், அரசின் இந்த நடவடிக்கை சரியென வாதிட்ட அவர், இது சுயாதீன ஊடகங்கள் மூடப்பட்டு, நாட்டில் இருந்து பத்திரிகையாளர்கள் பெருமளவில் வெளியேற்றப்பட்ட காலகட்டமாகும் என்றார்.
போர்க்கால தணிக்கை காலத்தில் வாழ்கிறோம்
மேலும் பேசிய பெஸ்கொவ், "போர்க்கால தணிக்கை காலத்தில் நாம் வாழ்கிறோம்; இது முன்னெப்போதும் இல்லாத ஒன்று. யுத்தம் போர்க்களத்தில் மட்டுமல்ல, தகவல் வெளியிலும் நடத்தப்படுகிறது.
ரஷ்யாவை இழிவுபடுத்த வேண்டுமென்றே செயல்படும் ஊடக நிறுவனங்களை கண்டும் காணாமல் இருப்பது தவறு. முக்கியமான தகவல்களை அடக்குவது நாட்டிற்கு எதிரான தகவல் போரின் சகாப்தம். எனவே ஊடக ஒடுக்குமுறை நியாயப்படுத்தப்பட்டது" என்றார்.
2022ஆம் ஆண்டு பிப்ரவரி முதல், கிட்டத்தட்ட அனைத்து வகையான பொது எதிர்ப்புகளையும் ரஷ்யா தடை செய்துள்ளது. குறிப்பாக தி மாஸ்கோ டைம்ஸ் உட்பட பல சுயாதீன ஊடகங்களையும் தடை செய்துள்ளது.
மேலும், உக்ரைனுக்கு எதிரான போரை விமர்சிப்பவர்களை குறிவைத்து, தண்டனை சட்டங்களின் பயன்பாட்டை விரிவுப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |