நடுக்கடலில் பற்றியெரிந்த பயணிகள் படகு: வெளியான பதறவைக்கும் காணொளி
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகு ஒன்று நடுக்கடலில் பெரும் தீ விபத்தில் சிக்கிய நிலையில், அதில் இருந்து மொத்த பயணிகளையும் மீட்டுள்ளதாக கடலோர காவல்படையினர் தெரிவித்துள்ளனர்.
திடீரென்று படகில் தீ விபத்து
பிலிப்பைன்ஸின் Siquijor தீவில் இருந்து Bohol தீவுக்கு 65 பயணிகள் மற்றும் 55 அதிகாரிகளுடன் புறப்பட்டு சென்றுள்ளது M/V Esperanza Star என்ற பயணிகள் படகு. இந்த நிலையில் திடீரென்று அந்த படகில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
Philippines ferry with 120 passengers catches fire at sea
— RT (@RT_com) June 18, 2023
Follow us on Telegram: https://t.co/8u9sqgdVPV pic.twitter.com/TxsZd2pHbI
தீ மளமளவென பரவத்தொடங்கியதும், தகவல் அறிந்து சம்பவப்பகுதிக்கு விரைந்து வந்த கடலோர காவல்படையினர் பயணிகளை மீட்கவும் தீயை அணைக்கவும் போராடியுள்ளனர்.
இந்த நிலையில் மொத்தமுள்ள 120 பயணிகளையும் பத்திரமாக மீட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது. தீ விபத்திற்கான காரணம் குறித்து முறையான விசாரணை முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
@reuters
பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லை
தீயணைப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் இரண்டு கடலோர காவல்படை கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. மட்டுமின்றி, மீட்கப்பட்ட பயணிகள் மற்றும் படகு ஊழியர்களின் நிலை தொடர்பில் எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
பிலிப்பைன்ஸ் நாட்டை பொறுத்தமட்டில் 7,500 தீவுகளால் சூழப்பட்ட பகுதியாகும். இங்கு பயன்படுத்தப்படும் படகுகள் அனைத்தும் பல காலங்களுக்கு முன்னர் வாங்கப்பட்டவை எனவும், பாதுகாப்புக்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்றும் கூறுகின்றனர்.
@reuters
மார்ச் மாதத்தில், தெற்கு பிலிப்பைன்ஸில் சுமார் 250 பேரை ஏற்றிச் சென்ற படகு ஒன்று தீப்பிடித்தது. இதில் 6 மாத பிஞ்சு குழந்தை உட்பட 2 டசின் பயணிகள் மரணமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |