இஸ்ரேல் நாட்டில் பிரதமருக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்: பேச்சு வார்த்தையை துவங்கிய பிரதமர்
இஸ்ரேலிய நாட்டின் பிரதமர் நீதித்துறை சட்ட மசோதாவிற்கு எதிராக பேசியதற்காக பாதுகாப்புத் துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்ததை தொடர்ந்து நாடு முழுவதும் போராட்டம் வலுத்துள்ளது.
நீதித்துறை திட்டம்
இஸ்ரேல் நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு( Benjamin Netanyahu) நாடாளுமன்றத்திலுள்ள பாதுகாப்பு அமைச்சரை இஸ்ரேலிய தலைவரின் நீதித்துறை மாற்றத் திட்டத்தை எதிர்த்துப் பேசியதற்காக திடீரென பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
@AP Photo
இதனைத் தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் நாடு முழுவதும் உள்ள நகரங்களின் தெருக்களில் இறங்கி போராட்டங்களில் ஈடுப்பட்டுள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இஸ்ரேல் அரசு வெளியிட்ட நீதித்துறை சட்ட மசோதாவிற்கு எதிராக நாடு முழுவதும் பெரும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
ஆனால் அரசு எந்த விதத்திலும் பதிலளிக்காமல் மௌனம் காத்து வருகிறது.
வலுக்கும் போராட்டம்
கடந்த ஞாயிறு இரவு ஜெருசலேமில் உள்ள நெதன்யாகுவின் வீட்டிற்கு வெளியே கூடியிருந்த போராட்டக்காரர்களுடன் காவல்துறை சண்டையிட்டபோது அந்த சாலையில் நெருப்பினை மூட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
@AP Photo
பாதுகாப்புத் துறை அமைச்சர் யோவ் கேலன்ட்டை நெதன்யாகு பதவி நீக்கம் செய்தது, பிரதமர் தனது சொந்த கட்சி உறுப்பினர்களின் பேச்சை கேட்க விரும்பவில்லை என்பதை உணர்த்தியுள்ளது.
ஆளும் லிக்குட் கட்சியின் முதல் மூத்த உறுப்பினர் காலன்ட் திட்டத்திற்கு எதிராகப் பேசிய முதல் மூத்த உறுப்பினராக இருந்தார், இந்த போராட்டம் இராணுவத்தை பலவீனப்படுத்த அச்சுறுத்துவதாகக் கூறியுள்ளார்.
@AP Photo
இந்த நிலையில் நீதிமன்றத்தில் இன்று தீர்மானங்கள் நிறைவேற்றுவது பற்றி விவாதம் நடைபெற்று வருகிறது. நாடெங்கும் வெடித்திருக்கும் போராட்டத்திற்கு எதிராக சரியான முடிவு இஸ்ரேலிய அரசால் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னாள் பிரதமர் எச்சரிக்கை
1973 போருக்குப் பின்னர் இஸ்ரேல் மிகவும் ஆபத்தில் உள்ளது என முன்னாள் பிரதமர் நஃப்தலி பென்னட் எச்சரித்துள்ளார்.
@AP Photo
அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட நீதித்துறை மாற்றங்களுக்கு எதிரான பல மாத எதிர்ப்புகளுக்கு மத்தியில் இஸ்ரேல் "பெரும் ஆபத்தில் உள்ளது" என்று பென்னட் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பாதுகாப்பு மந்திரி யோவ் கேலன்ட் பதவி நீக்கம் செய்யப்பட்டதை திரும்பப் பெறவும், அனைத்து தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தவும் நெதன்யாகுவை அவர் வலியுறுத்தியுள்ளார்.