உக்ரைனில் அழுகிக்கிடக்கும் ரஷ்யப் படைவீரரின் சடலத்தை உண்ணும் பன்றிகள்: வெளியாகியுள்ள பயங்கர காட்சி...
உக்ரைனில் கொல்லப்பட்ட ரஷ்யப் படைவீரர் ஒருவரின் அழுகிய சடலத்தை பன்றிகள் உண்ணுவதைக் காட்டும் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.
இப்படிப்பட்ட காட்சிகளை டெலிகிராம் சேனல் ஒன்றில் அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்கள் சில உக்ரைன் வீரர்கள்.
உக்ரைனில் கொல்லப்பட்ட ரஷ்யப் படைவீரர் ஒருவரின் அழுகிய உடலை பன்றிகள் சில உண்ணும் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.
பசியுடன் இருக்கும் ஐந்து பன்றிகள் சத்தத்துடன் அந்த உடலை உண்ணும் காட்சிகள் டெலிகிராம் சேனல் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளன.
இப்படி அகோர காட்சிகளை உக்ரைன் வீரர்கள் வெளியிடுவது இது முதல் முறையல்ல.
கடந்த மாதமும் இதேபோல ரஷ்யப் படைவீரரின் உடலை பன்றிகள் உண்ணும் காட்சி ஒன்றை வெளியிட்ட உக்ரைன் வீரர்கள், ’ரஷ்ய கேப்டனை உண்ணும் பன்றிகள்’ என அந்த வீடியோவுக்கு பெயரும் சூட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.