பறவை ரூபத்தில் வந்த ஆபத்து., இரத்த வெள்ளத்தில் விமானத்தை பத்திரமாக தரையிறக்கிய விமானி
பறவையொன்று காக்பிட் கண்ணாடியை உடைத்துவிட்டபோதிலும் விமானி பதற்றமில்லால் பத்திரமாக தரையிறக்கிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
விண்ட்ஷீல்டு கண்ணாடியை உடைத்த பறவை
நடுவானில் பறவை ஒன்று விமானத்தின் விண்ட்ஷீல்டு கண்ணாடியை உடைத்துக்கொண்டு மோதியது. கழுகு போல் மிகப்பெரியதாக தோற்றமளிக்கும் அந்தப் பறவை கண்ணாடியில் சிக்கி தொங்கியபடியே உயிரிழந்தது.
இவை அனைத்தும் காக்பிட்டில் விமானியின் கண்முன் இருக்கும் விண்ட்ஷீல்டு கண்ணாடியில் நடந்துள்ளது. அதிர்ஷடவசமாக விமானிக்கு ஒன்றும் ஆகவில்லை என கூறப்படுகிறது.
Representative Image: ISTOCKPHOTO
காக்பிட் முழுவதும் ரத்தம்
ஆனால், உயிரிழந்த பறவையின் ரத்தம் காக்பிட் முழுவதும் தெறித்தது. விமானி மீதும் முழுவதுமாக பறவையின் இரத்தமாக காட்சியளித்தது. இந்த காட்சிகளை அவரே தனது மொபைல் போனில் விடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
காக்பிட்டில் கண்ணாடி உடைந்த நிலையில் மாட்டிக்கொண்டிருக்கும் பறவையை அதிலிருந்து நீக்கினால் ஆபத்து என்பதால், பறவை அப்படியே விடப்பட்டது. விமானியும் எந்தவிதத்திலும் பதற்றம் இல்லாமல் விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார்.
Pilot safely lands his plane after a huge bird struck his windshield in the Los Ríos Province, Ecuador. Ariel Valiente was not injured during the incident. pic.twitter.com/Rl3Esonmtp
— Breaking Aviation News & Videos (@aviationbrk) June 15, 2023
இந்த சம்பவம் ஈக்வடாரின் லாஸ் ரியோஸ் மாகாணத்தில் நடந்துள்ளது. விமானி ஏரியல் வாலியன்ட் (Ariel Valiente) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த திகிலூட்டும் சம்பவத்தில் எந்த வகையான பறவை மோதியது என்பது பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை, ஆனால் சிலர் இது ஆண்டியன் காண்டராக இருக்கலாம், இது ஒன்பது அடி வரை இறக்கைகள் கொண்டதாக இருக்கலாம் என்று பரிந்துரைத்தனர்.
அதிர்ஷ்டசாலி
ட்விட்டர் பயனர் ஒருவர் விமானி மிகவும் அதிர்ஷ்டசாலி, ஏனெனெனில் இதுபோன்ற ஒரு சம்பவத்தில் கண்ணை இழந்த ஒரு விமானியை தனக்கு தெரியும் என கூறினார்.
மற்றொரு நபர், இப்படியொரு இக்கட்டான சூழலில் அமைதியாக செயல்பட்டதாக விமானி ஒரு லெஜெண்ட் என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |