நடுவானில் உயிரிழந்த விமானி... அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள ஒரு சம்பவம்
விமானி ஒருவர் நடுவானில், விமானத்தின் கழிவறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
நடுவானில் நிலைகுலைந்த விமானி
ஞாயிற்றுக்கிழமை இரவு, மியாமியிலிருந்து சிலி நோக்கி பயணித்துக்கொண்டிருந்த விமானம் ஒன்றின் விமானியான Ivan Andaur (56)க்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது.
Credit: Facebook
கழிவறைக்குச் சென்ற Ivan, அங்கேயே நிலைகுலைந்து விழுந்ததாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, அவரது சக விமானிகள் இருவர் அவசரமாக விமானத்தை பனாமாவில் தரையிறக்கியுள்ளார்கள்.
மருத்துவ உதவிக்குழுவினர் தெரிவித்த அதிரவைக்கும் தகவல்
Ivanக்கு சிகிச்சையளிப்பதற்காக மருத்துவ உதவிக்குழுவினர் விமானத்துக்கு விரைந்த நிலையில், அவரை அவர்கள் பரிசோதித்தபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்தது தெரியவந்துள்ளது.
Credit: Not known, clear with picture desk
செவிலியர்கள் சிலரும் இரண்டு மருத்துவர்களும் அவருக்கு உயிர் காக்கும் சிகிச்சையளித்தும் அவரைக் காப்பாற்ற முடியாமல் போயுள்ளது. மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக அவர்கள் கூறியுள்ளார்கள்.
இதற்கிடையில், Ivanக்கு உயிர் காக்கும் சிகிச்சையளிக்கத் தேவையான விடயங்கள் அந்த விமானத்தில் இல்லை என கூறப்படுகிறது.
Credit: Not known, clear with picture desk
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |