அமெரிக்காவில் பீட்சா டெலிவரி கொடூரம்: கர்ப்பிணி பெண் மீது 14 கத்திக்குத்து!
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கிஸ்ஸிம்மியில் நடந்த கொடூர சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பிறந்தநாளை கொண்டாடிக் கொண்டிருந்த ஒரு கர்ப்பிணி பெண், ஆன்லைனில் ஆர்டர் செய்த பீட்சாவை டெலிவரி செய்த பெண்ணால் 14 முறை கத்தியால் குத்தப்பட்டுள்ளார்.
கர்ப்பிணிக்கு கத்திக்குத்து
பீட்சா டெலிவரி செய்த 22 வயதான ப்ரியானா அல்வெலோ, டிப்ஸ் தொகை குறைவு எனக் கூறி கர்ப்பிணி பெண் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தியுள்ளார்.
அவரது ஆண் நண்பர்களுடன் வந்த ப்ரியானா அல்வெலோ, காதலனை ஒரு அறையில் பூட்டி வைத்துவிட்டு, கர்ப்பிணி பெண்ணை கொடூரமாக தாக்கியுள்ளார்.
கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டையை பகிர்ந்த இளவரசர் ஹாரி-மேகன் தம்பதி: அழகிய குழந்தைகளுடன் வெளியான புகைப்படம்
பின்னர் அங்கிருந்த விலை உயர்ந்த பொருட்களை கொள்ளையடித்து தப்பிச் செல்ல முயற்சித்துள்ளார்.
கைது மற்றும் விசாரணை
தாக்குதலில் பலத்த காயமடைந்த கர்ப்பிணி பெண் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் வழக்கு பதிவு செய்து ப்ரியானா அல்வெலோவை கைது செய்துள்ளனர்.
அவரது கூட்டாளியை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |