சீனாவில் பயங்கரமான விமான விபத்து: 133 பயணிகளின் நிலை என்ன?
சீனாவில் குன்மிங் நகரில் இருந்து குவாங்சூ நகருக்கு பறந்த கிழக்கு போயிங் 737 பயணிகள் விமானம் தெற்கு சீனாவில் திடீரென விபத்துக்குள்ளாகியுள்ளது.
கிட்டத்தட்ட 133 பயணிகளை ஏற்றிக்கொண்டு பறந்த கிழக்கு போயிங் 737 பயணிகள் விமானம் சீனாவின் குவாங்சூ பிராந்தியத்தின் வுஜோ நகருக்கு அருகிலுள்ள கிராமப்புற மலைப்பகுதியில் திடீரென விபத்துக்குள்ளாகியுள்ளது.
#BREAKING: Boeing 737 crashes in China – reportshttps://t.co/QBVi6OV2WD
— RT (@RT_com) March 21, 2022
(Unverified video) pic.twitter.com/oX3RtzGYM0
இந்த விமானம் 133 நபர்கள் வரை பயணித்த நிலையில், எத்தனை பயணிகள் வரை உயிரிழந்து உள்ளனர் என்ற முழுமையான தகவல் இன்னமும் வெளிவரவில்லை.
மேலும் இந்த விபத்தானது மரங்கள் அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் ஏற்பட்டுள்ளதால் மிகப்பெரிய காட்டு தீ அப்பகுதிகளில் ஏற்பட்டுள்ளது. இதனால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டும் வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது.
விபத்துக் குறித்த காரணமும் எந்தவொரு காரணமும் இதுவரை வெளிவராத நிலையில், இதுகுறித்த விசாரணையை சீன அரசு தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகிள்ளது.
இந்த விபத்து குறித்த cctv காட்சிகள் இணையத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
சீனாவில் 133 பயணிகளுடன் சென்ற விமானம் ஒன்று மலை பகுதியில் மோதி விபத்திற்குள்ளாகி உள்ளது. பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்#China #FlightAccident #Mountain #Boeing737 pic.twitter.com/WYO2JauK0M
— Oneindia Tamil (@thatsTamil) March 21, 2022
இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்யும் ரஷ்யா: அமைதி நிலைப்பாட்டின் பின்னணி!