போலந்து விமான விபத்து: கொட்டகையில் தஞ்சம் அடைந்த மக்களுக்கு ஏற்பட்ட பரிதாபம்
போலந்தின் வார்சாவிற்கு அருகில் உள்ள விமான நிலையத்தின் விமான கொட்டகையில் சிறிய ரக விமானம் ஒன்று மோதியதில் 5 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
விமான விபத்து
போலந்தின் நாட்டின் கிரிசினோ(Chrcynno) நகரத்தில் உள்ள விமான நிலைய விமான கொட்டகையில் திங்கட்கிழமை மாலை சிறிய ரக விமானம் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.
மோசமான வானிலை காரணமாக விமான கொட்டகையில் பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டு இருந்த நிலையில், திடீரென ஏற்பட்ட விமான விபத்து 5 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
அத்துடன் 7 பேர் வரை பலத்த காயமடைந்துள்ளனர் என போலந்து நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் ஆடம் நீட்ஜில்ஸ்கி தெரிவித்துள்ளார்.
விபத்துக்கான காரணம்
மோசமான வானிலையே விபத்துக்கான முக்கிய காரணமாக இருக்கலாம் என்று தீயணைப்பு துறை செய்தி தொடர்பாளர் மோனிகா நோகோவ்ஸ்கா-பிரைண்டா தகவல் தெரிவித்துள்ளார்.
In a fatal accident , a Cessna 208B Grand Caravan skydiving aircraft (SP-WAW) crashed into a hangar while attempting to land in gusty conditions at Chrcynno Airfield, Poland.
— FL360aero (@fl360aero) July 17, 2023
The pilot and at least four persons inside the hangar lost life, while 10 others were injured. pic.twitter.com/yUDQvUXJBi
Cessna 208 என்ற சிறிய ரக விமானம் விபத்தில் சிக்கி இருப்பதாக போலந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விபத்து ஏற்பட்ட கிரிசினோ கிராம பகுதிகளுக்கு மீட்பு பணிகளுக்காக 10 ஆம்புலன்ஸ்கள் மற்றும் 4 ஹெலிகாப்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |