மின் கோபுரத்தில் மோதி விபத்துக்குள்ளான விமானம்! அந்தரத்தில் 7 மணிநேரம் காயங்களுடன் போராடிய இருவர்
அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணத்தில் சிறிய ரக விமானம் ஒன்று மின் கம்பி கோபுரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
விமானத்தில் இருந்த இருவர் பல மணி நேரம் காற்றில் சுமார் 100 அடி உயரத்தில் தொங்கிய நிலையில் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த விபத்தால் அப்பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான மக்களுக்கு மாலையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
டவர் லைனில் மோதிய ஜெட் விமானம்
ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி மாலை 5:40 மணியளவில், மேரிலாந்தின் கெய்தர்ஸ்பர்க்கில் உள்ள மாண்ட்கோமெரி கவுண்டி ஏர்பார்க் அருகே பெப்கோ டவர் லைனில் ஒற்றை எஞ்சின் கொண்ட Mooney M20J எனும் சிறிய ரக ஜெட் விமானம் மோதியது.
Twitter @mcfrsPIO
விமானத்தில் இருந்த வாஷிங்டன் டி.சி.யைச் சேர்ந்த பைலட் பேட்ரிக் மெர்க்லே (65), லூசியானாவைச் சேர்ந்த பயணி ஜான் வில்லியம்ஸ் (66) ஆகிய இருவரும் ஏறக்குறைய 7 மணி நேரத்திற்குப் பிறகு மீட்கப்பட்டனர். இருவரும் கடுமையான காயங்களுடன் உள்ளூர் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால், காயங்கள் உயிருக்கு ஆபத்தானதாகத் தெரியவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த விபத்தால் அப்பபகுதியில் பரவலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது மற்றும் அருகிலுள்ள சாலை மூடப்பட்டது.
மின் விநியோகம் பாதிப்பு
இந்த விபத்து சுமார் 85,000 மக்களுக்குக்கான மின் விநியோகத்தை பாதித்துள்ளதாக பெப்கோ தெரிவித்தது. பின்னர் அதிகாலை 2 மணிக்கு மின்சார சேவையை மீண்டும் தொடங்கியது.
Twitter @GlobalUpdates7
மான்ட்கோமெரி கவுண்டி அதிகாரிகள், மின் தடை காரணமாக திங்கள்கிழமை அனைத்து பொதுப் பள்ளிகள் மற்றும் அலுவலகங்கள் மூடப்படும் என்றுஅறிவித்தது.
இந்த விபத்து FAA மற்றும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்தால் விசாரிக்கப்படும், NTSB விசாரணையை வழிநடத்தி கூடுதல் புதுப்பிப்புகளை வழங்கும் என்று FAA ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
— @dannotdaniel@mastodon.social ????? (@dannotdaniel) November 28, 2022
#BREAKING #maryland
— RawNews1st (@Raw_News1st) November 27, 2022
Small plane dangling from powerlines in Gaithersburg, Maryland; passengers trapped inside pic.twitter.com/4P8h4Tz7EG