திருமண நிகழ்ச்சியில் சைவ பிரியர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி! வைரலாகும் புகைப்படம்
திருமண நிகழ்ச்சிகளில் வரும் விருந்தினருக்கு அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப விருந்து அளிப்பதே உலக கலாச்சாரம்.
அப்படி இருக்கையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் சைவ உணவு உண்பவர்களுக்கு ராக்கெட் இலைகள் மற்றும் சில முலாம்பழம் துண்டுகள் கொடுத்து அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர் அந்த திருமண வீட்டுக்காரர்கள்.
அந்த திருமண நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட அந்த உணவை புகைப்படம் எடுத்து இணையதளத்தில் பதிவிட்டதை தொடர்ந்து, அது தற்போது சமூக வலைத்தளத்தில் 4k லைக்குகளை தாண்டி வைரல் ஆகிவருகிறது.
அந்த பதிவில் தற்போது பலரும் தங்கள் கண்டங்கள் மற்றும் கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.
ஒருவர் தனது ட்விட்டர் பதிவில், இது முற்றிலும் அபத்தமாகவும், முரட்டுத்தனமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.மேலும் இதை எப்போதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.
Vegan option at a wedding ? pic.twitter.com/2EOTOz2FOl
— herbiwhore? ?️? (@nerdzrope) January 22, 2022