பிரேசில் ஜனாதிபதியை கொல்ல சதித்திட்டம்: இராணுவத்தினர் உட்பட 5 பேர் கைது
பிரேசில் ஜனாதிபதி லுலா டா சில்வா-வை கொலை செய்வதற்கு முயற்சித்த 5 பேரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
5 பேர் கைது
கடந்த 2022ம் ஆண்டு பிரேசில் ஜனாதிபதியாக லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா(Luiz Inácio Lula da Silva) பொறுப்பேற்பதற்கு சற்று முன்னதாக அவரை கொலை செய்ய முயற்சி செய்த 5 நபர்களை பிரேசில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
உள்ளூர் ஊடகங்களின் தகவல் படி, செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்ட 5 நபர்களில் 4 பேர் இராணுவத்தினர் என்றும் ஒருவர் பொலிஸ் அதிகாரி என்று தெரியவந்துள்ளது.
2022ம் ஆண்டு டிசம்பர் 15ம் திகதி நாட்டின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட லுலா டா சில்வா மற்றும் துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஜெரால்டோ அல்க்மின் ஆகியோரை பதவியேற்புக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னதாக கொலை செய்ய தீட்டப்பட்ட சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக கைது செய்யப்பட்ட 5 பேரும் இருந்ததாக கூறப்படுகிறது.
ஜனாதிபதி லுலாவை கொல்ல மேற்கொள்ளப்பட்ட சதித்திட்டத்தை பிரேசில் பொலிஸார் முதல் முறையாக வெளிப்படுத்தியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |